முக்கோண இருஅடிக்கண்டம்
முக்கோண இருஅடிக்கண்டம் | |
---|---|
வகை | இருஅடிக்கண்டம் |
முகங்கள் | 6 சரிவகம், 2 முக்கோணம் |
விளிம்புகள் | 15 |
உச்சிகள் | 9 |
சமச்சீர்மை குலம் | D3h |
இருமப் பன்முகி | நீள் முக்கோண இருபட்டைக்கூம்பு |
பண்புகள் | குவிவு |
வலையமைப்பு |
முக்கோண இருஅடிக்கண்டம் (triangular bifrustum) என்பது, இருஅடிக்கண்டப் பன்முகிகளின் முடிவிலாத் தொடரில் முதலாவதாக உள்ள இருஅடிக்கண்ட வகையாகும். ஒரு முக்கோண இருஅடிக்கண்டம் 6 சரிவக முகங்களையும் 2 முக்கோண முகங்களையும் கொண்டது. முக்கோண இருஅடிக்கண்டத்தைத் முனைதுண்டிக்கப்பட்ட முக்கோண இருபட்டைக்கூம்பு எனவும் அழைக்கலாம். எனினும் ஒரு முக்கோண இருபட்டைக்கூம்பின் ஐந்து முனைகளையும் துண்டிக்கக் கிடைக்கும் பன்முகியும் இதே பெயரால் அழைக்கப்படுவதால், முனைதுண்டிக்கப்பட்ட முக்கோண இருபட்டைக்கூம்பு என முக்கோண இருஅடிக்கண்டத்தை அழைப்பது ஈரடிவகைக்குள்ளாகும்.[1]
ஒரு முக்கோண இருபட்டைக்கூம்பின் துருவ அச்சின் இரு முனைகளையும் துண்டித்து அதனை இரு அடிக்கு-அடி அடிக்கண்டங்களின் இணைப்பு மூலம் ஒரு முக்கோண இருஅடிக்கண்டத்தை வடிவமைக்கலாம். இது ஒரு மீநுண்மபடிக வடிவில் இருக்கும்.[2][3]
அடுக்கப்பட்ட இரு ஒழுங்கு எண்முகிகளின் பக்கங்களைச் சுற்றி மூன்று சோடி நான்முகிகளை இணைத்து ஒரு முனைதுண்டிக்கப்பட்ட முக்கோண இருபட்டைக்கூம்பை வடிவமைக்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ For instance, Haji-Akbari et al. use it in the latter sense: see Haji-Akbari, Amir; Chen, Elizabeth R.; Engel, Michael; Glotzer, Sharon C. (2013), "Packing and self-assembly of truncated triangular bipyramids", Phys. Rev. E, 88 (1): 012127, arXiv:1304.3147, Bibcode:2013PhRvE..88a2127H, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1103/physreve.88.012127, PMID 23944434
{{citation}}
: Cite has empty unknown parameter:|1=
(help). - ↑ Kharisov, Boris I.; Kharissova, Oxana Vasilievna; Ortiz-Mendez, Ubaldo (2012), Handbook of Less-Common Nanostructures, CRC Press, p. 466, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781439853436.
- ↑ Yoo, Hyojong; Millstone, Jill E.; Li, Shuzhou; Jang, Jae-Won; Wei, Wei; Wu, Jinsong; Schatz, George C.; Mirkin, Chad A. (2009), "Core–Shell Triangular Bifrustums", Nano Letters, 9 (8): 3038–3041, Bibcode:2009NanoL...9.3038Y, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/nl901513g, PMC 3930336, PMID 19603815.
வெளியிணைப்புகள்
தொகு- Conway Notation for Polyhedra Try: t3dP3