முசா கா முசல்லா
முசா கா முசல்லா ( Musa ka Musalla: மோசசின் பாய்) என்பது இமயமலையில் சிரான் மற்றும் ககன் பள்ளத்தாக்கு சந்திப்பில் சுமார் 4,100 மீட்டர் (13,500 அடி) உயரத்தில் நிற்கும் ஒரு சிகரமாகும்.[1] இது ஆப்டாபாத் நகருக்கு வடக்கே 150 கிலோமீட்டர் (93 மை) தொலைவில் மன்சேரா மாவட்டத்தின் பாலாகோட் வட்டத்தில் அமைந்துள்ளது.[2]
முசா கா முசல்லா | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 4,100 m (13,500 அடி) |
ஆள்கூறு | 34°42′58″N 73°21′37″E / 34.716044°N 73.360241°E |
புவியியல் | |
அமைவிடம் | மன்சேரா, கைபர் பக்துன்வா மாகாணம் |
மூலத் தொடர் | இமயமலை |
பெயர்க் காரணம்
தொகுமுசா கா முசல்லா என்ற பெயர் "மோசசின் பாய்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மூசா என்ற ஆடு மேய்ப்பவர் அங்கு உச்சியில் பிரார்த்தனை செய்ததாக ஒரு கதை கூறுகிறது.[2] மலையுச்சியில் அவருக்கு ஒரு சன்னதியும் உள்ளது, அவர் உள்ளூர் மக்களால் துறவியாக மதிக்கப்படுகிறார்.[1]
பாதைகள்
தொகுகோடைக்காலத்தில் மூன்று வழிகள் வழியாக இந்த சிகரத்தை அணுகலாம். ஆனால் அனைவருக்கும் பல மணிநேர மலையேற்றம் தேவை.[2]
- பாலாகோட் முதல் நாடி பங்களா மற்றும் குந்த் பங்களா வழி
- பராஸ் முதல் சரன் வனப் பாதை
- சங்கியாரி முதல் மண்டகுச்சா வழி
சங்கியாரி முதல் மண்டா குச்சா வரையிலான பாதை சிகரத்தை அடைய மிகவும் எளிதான பாதையாகும்.[3]
இதனையும் பார்க்கவும்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "So close to Musa ka Musalla". The News on Sunday (TNS) (in ஆங்கிலம்). 2016-11-27. பார்க்கப்பட்ட நாள் 2021-01-03.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 2.0 2.1 2.2 "Musa ka Musalla: Pakistan's playground where fairies come to play". The Express Tribune. 2017-09-30. பார்க்கப்பட்ட நாள் 2021-01-03.
- ↑ Elahi, Faysal Khan (2017-12-11). "Trekking to Siran Valley is a dream come true for adventure junkies and photo enthusiasts alike". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-03.