பாலாகோட்

ஸ்லீப்பர் ஷெல்

பாலாகோட் (Balakot) பாக்கித்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின், மன்செரா மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டி, குன்கார் ஆற்றின் கரையில் அமைந்த நகரம் ஆகும். [1][2] இமயமலைத் தொடர்களில் அமைந்த இந்நகரம், கோடைக்கால வாழிடம் ஆகும்.

பாலாகோட்
بالاکوٹ
பாலாகோட் is located in பாக்கித்தான்
பாலாகோட்
பாலாகோட்
ஆள்கூறுகள்: 34°32′N 73°21′E / 34.54°N 73.35°E / 34.54; 73.35
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
நேர வலயம்பாக்கித்தான் சீர் நேரம் (ஒசநே+5)
நகரங்கள்1
Number of Union Councils12

பாலகோட் நகரம், தேசியத் தலைநகரம் இஸ்லாமாபாத்திற்கு வடக்கே 160 கிமீ தொலைவிலும், முசாஃபராபாத் நகரத்திற்கு மேற்கே 50 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்நகரம் உயர்ந்த மலைகளைக் கொண்டதால், கோடைக்கால வாழிடமாக உள்ளது.

2005 காஷ்மீர் நிலநடுக்கத்தின் போது 40 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பாலகோட் நகரம் முற்றிலும் அழிந்தது. [3][4] பின்னர் இந்நகரத்தை, சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது.[5]

இந்நகரத்தின் எல்லைப்புறப் பகுதிகள், தலிபான் மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது போன்ற திவீரவாத இயக்கங்களின் முகாம்கள் செயல்படுகிறது.

இனக்குழுக்கள் தொகு

கால்நடைகளை மேய்க்கும், குஜ்ஜாரி மொழி பேசும் குர்சார்கள் சுவாதிகள், துருக், மொகல், சையத் இன மக்கள் இந்நகரத்தில் அதிகம் வாழ்கின்றனர்.

தட்பவெப்பம் தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், பாலகோட்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 24.4
(75.9)
25.2
(77.4)
31.1
(88)
36.0
(96.8)
43.3
(109.9)
42.1
(107.8)
41.2
(106.2)
39.7
(103.5)
35.2
(95.4)
33.9
(93)
29.0
(84.2)
24.7
(76.5)
43.3
(109.9)
உயர் சராசரி °C (°F) 13.9
(57)
15.2
(59.4)
19.3
(66.7)
25.9
(78.6)
31.3
(88.3)
35.5
(95.9)
32.3
(90.1)
31.2
(88.2)
31.0
(87.8)
27.4
(81.3)
22.2
(72)
15.9
(60.6)
25.09
(77.17)
தினசரி சராசரி °C (°F) 8.1
(46.6)
9.5
(49.1)
13.5
(56.3)
19.3
(66.7)
24.3
(75.7)
28.1
(82.6)
26.8
(80.2)
25.9
(78.6)
24.0
(75.2)
19.3
(66.7)
14.2
(57.6)
9.5
(49.1)
18.54
(65.38)
தாழ் சராசரி °C (°F) 2.2
(36)
3.8
(38.8)
7.6
(45.7)
12.7
(54.9)
17.4
(63.3)
20.7
(69.3)
21.2
(70.2)
20.6
(69.1)
17.1
(62.8)
11.3
(52.3)
6.1
(43)
3.1
(37.6)
11.98
(53.57)
பதியப்பட்ட தாழ் °C (°F) −3.0
(27)
-2.2
(28)
−1.0
(30)
3.9
(39)
8.0
(46.4)
10.0
(50)
15.0
(59)
13.3
(55.9)
10.0
(50)
5.2
(41.4)
1.7
(35.1)
−1.3
(29.7)
−3
(27)
பொழிவு mm (inches) 105.4
(4.15)
156.1
(6.146)
195.9
(7.713)
122.5
(4.823)
80.5
(3.169)
107.3
(4.224)
384.3
(15.13)
311.4
(12.26)
100.8
(3.969)
48.9
(1.925)
44.0
(1.732)
87.5
(3.445)
1,744.6
(68.685)
ஆதாரம்: NOAA (1971-1990) [6]

வரலாறு தொகு

மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு, குசான் பேரரசு, இந்தோ கிரேக்கம், காபூல் சாகி, சீக்கியப் பேரரசு, முகலாயப் பேரரசு, பிரித்தானிய இந்தியாவில் பாலாகோட் நகரம் இருந்தது. [7] இந்தியப் பிரிவினைக்கு பின்னர், 1947-இல் இந்நகரம் பாகிஸ்தான் நாட்டுடன் இணைந்தது.

இந்தியப் போர் விமானத் தாக்குதல்கள் தொகு

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், இந்திய மத்திய சேமப்படை அணியைச் சேர்ந்த 40 வீரர்கள், ஜெய்ஸ்-இ-முகமது இயக்க தீவிரவாதியின் கார் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பலியானதை அடுத்து, இந்திய போர் விமானங்கள், பாலகோட் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஜப்பா, கார்ஹி ஹபிபுல்லா போன்ற நகரங்களில் இயங்கும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்களை, 26 பிப்ரவரி 2019 அன்று அதிகாலையில் தகர்த்து அழித்தது. [8][9][10][11][12] [13]

படக்காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Balakot city: A tale of the forgotten town
  2. கூகுள் வரைபடத்தில் பாலாகோட் நகரத்தின் அமைவிடம்
  3. 2005 Kashmir earthquake
  4. "Learning from Earthquakes: The Kashmir Earthquake of October 8, 2005: Impacts in Pakistan" (PDF). EERI. February 2006. பார்க்கப்பட்ட நாள் 20 June 2018. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. Saudi Public Assistance for Pakistan Earthquake Victims
  6. "Balakot Climate Normals 1971-1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 16 January 2013.
  7. "Index of /culture/documents/publications". unesco.org.pk. பார்க்கப்பட்ட நாள் 2018-11-30.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. தீவிரவாதிகளின் தளத்தை தகர்த்த இந்திய விமானப்படை
  9. [https://www.bbc.com/tamil/india-47367118
  10. BALAKOT ATTACK EXPLAINED
  11. "India destroys JeM terror camps: Where exactly is Balakot?". businesstoday. 26 February 2019. https://www.businesstoday.in/top-story/india-destroys-jem-terror-camps-where-exactly-is-balakot/story/322367.html. பார்த்த நாள்: 26 February 2019. 
  12. VanSickle, Abbie (19 November 2016). "Small-Town "Terrorists" : The Infamous Post-9/11 California "Sleeper Cell" Case Continues to Unravel".
  13. "Treasury Targets Pakistan-Based Terrorist Organizations Lashkar-E Tayyiba and Jaish-E Mohammed". www.treasury.gov.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாகோட்&oldid=3597203" இலிருந்து மீள்விக்கப்பட்டது