முதலாம் கிளியோம்ப்ரோட்டஸ்

கிமு 4 ஆம் நூற்றாண்டு எசுபார்த்தன் மன்னர்

கிளியோம்ப்ரோடஸ் I (Cleombrotus I, கிரேக்கம்: ΚλεόμβροτοςKleombrotos ; இறப்பு, கிமு 6 சூலை 371 ) கிமு 380 முதல் கிமு 371 வரை ஆட்சி செய்த அகியட் பரம்பரையைச் சேர்ந்த எசுபார்த்தன் மன்னர் ஆவார். கிளியோம்ப்ரோடசின் துவக்ககால வாழ்க்கை பற்றி அதிகம் அறியப்படவில்லை. இவர் பௌசானியாசின் மகனாவார். கிமு 380 இல் இவரது சகோதரர் முதலாம் அகேசிபோலிஸ் இறந்த பிறகு இவர் எசுபார்த்தாவின் மன்னரானார். மேலும் லியூக்ட்ரா சமரில் எபமினேண்டாசின் தலைமையிலானதீபன்களுக்கு எதிராக நேச நாட்டு எசுபார்த்தன்-பெலோபொன்னேசிய இராணுவத்தை வழிநடத்தினார். இவரது மரணம் மற்றும் இவரது இராணுவத்தின் முழுமையான தோல்வி பண்டைய கிரேக்கத்தில் எசுபார்த்தன் ஆதிக்கம் முடிவுக்கு வர வழிவகுத்தது. கிளியோம்ப்ரோடசுக்குப் பிறகு அவரது மகன் இரண்டாம் ஏஜெசிபோலிஸ் பதவி ஏற்றார். இவரது மற்றொரு மகன் இரண்டாம் கிளீமினெஸ் ஆவார்.

முதலாம் கிளியோம்ப்ரோட்டஸ்
எசுபார்த்தாவின் மன்னர்
ஆட்சிக்காலம்கிமு 380–371
முன்னையவர்Agesipolis I
பின்னையவர்Agesipolis II
இறப்புகிமு 6 சூலை 371
லியூக்ட்ரா, போயோட்டியா
குழந்தைகளின்
பெயர்கள்
Agesipolis II மற்றும் Cleomenes II
GreekΚλεόμβροτος

பல வரலாற்றாசிரியர்கள் கிளியோம்ப்ரோடசை அவரது சக மன்னரான இரண்டாம் அஜிசிலேயஸ் போலல்லாமல், தீபன் சார்பு போக்கைக் கொண்டிருந்தார் என்கின்றனர். சில நவீன வரலாற்றாசிரியர்கள் அவர் உண்மையில் தீபனுக்கு ஆதரவானவர் என்பதை நம்பவில்லை என்றாலும், அவரது சமகாலத்தவர்களால் லுக்ட்ராவில் ஏற்பட்ட அவமானகரமான தோல்விக்கு அவர் குற்றம் சாட்டப்பட்டார். [1] தேமோபைலேச் சமரில் லியோனிடாசுக்குப் பிறகு போரில் இறந்த முதல் எசுபார்த்தன் மன்னர் இவரே.

குறிப்புகள்

தொகு