லியூக்ட்ரா சமர்

கிமு 371 இல் எசுபார்த்தாவுக்கும் தீப்சுக்கும் இடையிலான சமர்

லியூக்ட்ரா சமர் (Battle of Leuctra, கிரேக்கம்: Λεῦκτρα) என்பது கிமு 371 சூலை 6 அன்று தீபன்கள் தலைமையிலான போயோட்டியர்களுக்கும், எசுபார்த்தவுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் இடையில் நடந்த ஒரு சமராகும். இது கொரிந்தியப் போருக்குப் பிந்தைய முக்கியமான ஒரு மோதலாகும். தெஸ்பியா பிரதேசத்தில் உள்ள போயோட்டியாவில் உள்ள லியூக்ட்ரா என்ற கிராமத்தின் சுற்றுப்புறத்தில் இப்போர் நடந்தது. [2] தீப்சின் வெற்றியானது கிரேக்க தீபகற்பத்தின் மீது எசுபார்த்தாவின் அபரிமிதமான செல்வாக்கை சிதைத்தது. எசுபார்த்தா ஒரு தலைமுறைக்கு முன்னர் பெலோபொன்னேசியப் போரில் பெற்ற வெற்றியின் மூலம் ஆதிக்கம் பெற்றிருந்தது.

லியூக்ட்ரா சமர்
பெலோபொன்னேசியன் போருக்கு பிந்தைய மோதல்களின் ஒரு பகுதி

லியூக்ட்ரா சமரில் தீபன்களை வழிநடத்தும் பெலோப்பிடாசு.
நாள் 6 சூலை 371[1]
இடம் போயோட்டியா
38°15′53″N 23°10′27″E / 38.2647°N 23.1743°E / 38.2647; 23.1743
தீப்சின் வெற்றி
பிரிவினர்
போயோட்டியா எசுபார்த்தா
தளபதிகள், தலைவர்கள்
Epaminondas
பெலோப்பிடாசு
முதலாம் கிளியோம்ப்ரோட்டஸ் 
பலம்
6,000–7,000 ஹாப்லைட்டுகள்
1,500 குதிரைப்படை
10,000–11,000 ஹாப்லைட்டுகள்
1,000 குதிரைப்படை
இழப்புகள்
300 (தயோடோரசின் கூற்றின்படி)
47 (பௌசானியாசின் கூற்றின்படி )
1,000 (செனபோன் கூற்றின்படி)
4,000+ (தியோடோரசின் கூற்றுப்படி)
Lua error in Module:Location_map at line 391: The value "{{{longitude}}}" provided for longitude is not valid.

முன்னுரை

தொகு

கிமு 371 இல், தீப்சின் புதிதாக நிறுவப்பட்ட சனநாயகத்தினால் நான்கு போயோடார்கள் தேர்ந்தெடுக்கபட்டனர். இது போயோடியன் லீக்கின் தளபதிகளின் பாரம்பரிய பட்டமாகும். [3] தீப்ஸ், ஏதென்சின் நல்லுறவில் இருந்த போசிஸ் மீது படையெடுத்தது; பிளாட்டீயாவையும், தெஸ்பியையும் கைப்பற்றியது. இதனால் தீப்சுடனான ஏதென்சின் உறவில் விரிசல் விழுந்தது. [3] இதற்கிடையில் கிரேக்க நடுகளுக்கிடையில் அமைதி உடன்பாடுக்கான ஏற்பாடுகள் நடந்தன. இதற்காக கிமு 371 இல் எசுபார்த்தாவில் ஒரு அமைதி மாநாடு கூடியது. அதில் கலந்து கொள்ள தீப்சு உள்ளிட்ட கிரேக்கத்தின் அனைத்து நாடுகளும் தங்கள் பேராளர்களை அனுப்பினர். இந்தக் கூட்டத்தில் அமைதி உடன்பாடு தயாரானது. உடன்படிக்கையில், எசுபார்த்தா தனக்கும் தன் கூட்டாளிகள் சார்பாகவும் கையொப்பமிட்டது. தீப்சின் சார்பில் வந்திருந்த எபமினொண்டாஸ் முழு போயோட்டியன் லீக் சார்பாக கையெழுத்திட வந்தபோது. அதற்கு எசுபார்த்தா மறுத்துவிட்டது. அவர் தீப்சின் பிரதிநிதியாக மட்டுமே கையொப்பமிடலாம் என்றது. இதை ஏற்க எபமினோண்டாஸ் மறுத்துவிட்டார். [4] (செனபோனின் கூற்றுப்படி, தீப்சின் பேராளர் "தீப்ஸ்" என்று கையெழுத்திட்டனர். ஆனால் அடுத்த நாள் தங்கள் கையொப்பத்தை "போயோட்டியர்" என்று மாற்றுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் எசுபார்த்தன் மன்னர்களில் ஒருவரான இரண்டாம் அஜிசிலேயஸ் அதை அனுமதிக்கவில்லை. ) [5] இதில், எசுபார்த்தா தனது உறுதியற்ற அதிகாரத்தை மீண்டும் நடு கிரேக்கத்தில் நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பாக கண்டது. [6] எனவே, எசுபார்த்தன் மன்னர், முதலாம் கிளியோம்ப்ரோடசு போசிசிலிருந்து போருக்கு அணிவகுத்துச் சென்றார்.

 
மலைகள் வழியாக அணிவகுத்துச் செல்லும் எசுபார்த்தன் இராணுவம்

எசுபார்த்தன்கள் கணவாய் உள்ள சுலபமான பாதை வழியாக போயோட்டியாவிற்குள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படது. ஆனால் அதற்கு பதிலாக, திஸ்பே வழியாக மலைகளின் மீது அணிவகுத்துச் சென்று, தீபன்கள் தாங்கள் வருவதை அறிந்து கொள்வதற்கு முன்பே கிரூசிஸ் கோட்டையைக் (தீப்சின் பன்னிரண்டு போர்க்கப்பல்களுடன் சேர்த்து) கைப்பற்றினர். பின்னர் லூக்ட்ராவுக்குச் சென்றனர். அவர்கள் போயோடியன் இராணுவத்தால் எதிர்கொள்ளப்பட்டனர். அப்போது இருந்த ஆறு போயோடியன் தளபதிகளிடம் (அதாவது போயோடார் ) எசுபார்த்தன்களிடம் போரிடவேண்டும் என்று வதாடினார். அப்போது அதற்கு ஆதரவாக, எதிர்பாக என சம எண்ணிக்கையில் ஆதரவு இருந்தது. ஏழாவது ஒருவர் வந்தபோதுதான், எபமினோண்டாசின் ஆதவராக வந்து பேரிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. [7] தாங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தபோதிலும் மேலும் தங்களது கூட்டாளிகளின் விசுவாசம் சந்தேகத்திற்குரியதாக இருந்தபோதிலும், போயோட்டியர்கள் நகரத்திற்கு முன் உள்ள சமவெளியில் போரிட முடிவெடுத்தனர்.

படை பலம்

தொகு

பல பண்டைய எழுத்தாளர்கள் ஒன்று அல்லது இரண்டு படைகளுக்குமான புள்ளிவிவரங்களைத் தருகின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவை முரண்பாடானவையாகவும் மற்றும் சில நம்பமுடியாதவையாகவும் உள்ளன. [8] நவீன வரலாற்று அறிஞர்களின் மதிப்பீடுகளானது போயோடியன் படை பலம் 6,000 முதல் 9,000 வரை என்று வேறுபடுகின்றன. [9] எசுபார்த்தன் தரப்பைப் பொறுத்தவரை, பெரும்பாலான நவீன அறிஞர்கள் புளூடார்ச்சின் 10,000 காலாட்படை மற்றும் 1,000 குதிரைப்படையை உறுதிப்படுத்துகின்றனர். [9]

இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. எனினும் எதிர்பாராத வகையில் படைபலம் குறைந்த தீப்சின் கை ஓங்கியது. தீப்சின் படைகள் எசுபார்தன் படை வரிசையில் வலதுபக்கத்தில் இருந்தவர்களை அடித்து நொறுக்கினர். எசுபார்டாவின் வலதுபுறத்தில் சுமார் 1,000 பேர் இழப்புகளுடன் பின்வாங்கினர். போரில் இறந்தவர்களில் 400 பேர் எசுபார்த்தாவின் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களில் சிலரும், மன்னர் முதலாம் கிளியோம்ப்ரோட்டஸ் உள்ளிட்டோரும் அடங்குவர். [2]

பின்விளைவு

தொகு
 
லியூக்ட்ரா சமரின் நினைவுச் சின்னம்

எசுபார்த்தன் படை மேலும் போரிடுவது முட்டாள்தனம் என கருதி தோல்வியை ஒப்புக் கொண்டு பின்வாங்கியது. அதே நேரத்தில் தீபசும் எஞ்சியிருக்கும் எசுபார்த்தன்கள் மீதான தாக்குதலைத் தொடர வேண்டாம் என்று முடிவெடுத்தனர். [10]

குறிப்புகள்

தொகு
  1. The Battle of Leuctra, retrieved 6-18-2019
  2. 2.0 2.1   Caspari, Maximilian (1911). "Leuctra". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 16. Cambridge University Press. 
  3. 3.0 3.1 Tritle 1987, p. 80
  4. History of Greece, G. Grote vol. 9 p. 155-6
  5. Xenophon, Hellenica VI 3.19 பரணிடப்பட்டது 2019-09-29 at the வந்தவழி இயந்திரம்
  6. Tritle 1987, p. 81
  7. "Pausanias, Description of Greece". Archived from the original on 2022-06-28. பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.
  8. Lost Battles, Philip Sabin p117
  9. 9.0 9.1 Lost Battles, Philip Sabin p118
  10. Greek Warfare, Myths and Realities, Hans van Wees p136
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியூக்ட்ரா_சமர்&oldid=3612784" இலிருந்து மீள்விக்கப்பட்டது