போயோடார்

பண்டைய கிரேக்கத்தின் பொயேட்டியன் கூட்டமைப்பின் உயர் பதவி

போயோடார் (Boeotarch, கிரேக்கம்: Βοιωτάρχης‎, Boiotarches ) என்பது போயேட்ரியா கூட்டு இனக்குழுவின் தலைமை அதிகாரிகளின் பதவிப் பெயராகும். கிமு 379 இல் போயேட்டிய நகரங்களை எசுபார்த்தன் ஆதிக்கத்திலிருந்து கிளர்ச்சி செய்து விடுவித்த பிறகு இந்த பதவி நிறுவப்பட்டது. போயோடியா முழுவதிலும் உள்ள ஏழு தேர்தல் மாவட்டங்களில் இருந்து சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு போயோடார்கள் இருந்தனர். பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரமாக, தீப்சிலிருந்து பொதுவாக நான்கு போயோடார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்ற மூன்று பேர் வெளி மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். [1] எவ்வாறாயினும், போயோடார்களின் எண்ணிக்கை ஏழு என்ற அளவில் நிலையாக இருந்திருக்காது. அவர்கள் முந்தைய போயோட்டியன் லீக்கைப் போலவே மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாமலும் இருந்திருக்கலாம்.[2]

தேர்தலில் வெற்றிபெற்ற போயோடியர் ஆண்டின் முதல் நாளில் (1 Boukataios ) பதவி ஏற்பார். ஆண்டு முடிவடையும் போது பதவியை துறப்பார். அதிகாரத்தை விட்டுக்கொடுக்காது நீடிப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகும். போயோடார்களின் பணியானது தளபதிகளாகவும், அரசியல் தலைவர்களாகவும் செயல்படும் ஏதெனியன்,ஸ்ரடிகெஸ்களை ஓரளவு ஒத்ததாகும். உண்மையில், போயோட்டியன் லீக்கில் உள்ள பல அரசியல், இராணுவ, நீதித்துறை அலுவலகங்கள் ஏதெனியன் மாதிரியிலிருந்து உருவாக்கபட்டவை. போயோட்டியர்களும் ஒரு ஆர்கோனைக் கொண்டிருந்தனர். ஆனால் ஏதெனியன் ஆர்கோனைப் போலல்லாமல், அவரது கடமைகள் வெறும் குறியீடாக இருந்தன. [2]

கிமு 4 ஆம் நூற்றாண்டின் மத்தியில் (" தீப்சின் மேலாதிக்கம் ") கிரேக்கத்தில் தீப்சை மேலாதிக்க நிலைக்கு கொண்டு சென்ற எபமினோண்டாஸ், பெலோப்பிடாசு ஆகியோர் இந்த பதவியை வகித்த மிகவும் பிரபலமான நபர்களாவர். [1]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போயோடார்&oldid=3779770" இலிருந்து மீள்விக்கப்பட்டது