முதலாம் பிருதிவிசேனன்

வாகாடக ஆட்சியாளர்

முதலாம் பிரிதிவிசேனன் ( Prithivishena I ஆட்சி சுமார் 360 – 385 பொ.ச. [1] ) வாகாடக வம்சத்தின் நந்திவர்தன-பிரவரபுர கிளையின் ஆட்சியாளர் ஆவார். இவர் கிளையின் நிறுவனர் முதலாம் உருத்திரசேனனின் மகனும் வாரிசுமாவார்.

முதலாம் பிருதிவிசேனன்
மகாராஜா
ஆட்சிக்காலம்சுமார் 360 - 385 பொ.ச.
முன்னையவர்முதலாம் உருத்திரசேனன்
பின்னையவர்இரண்டாம் ருத்திரசேனர்
மரபுவாகாடகப் பேரரசு

பின்னணி

தொகு

இவரது காலத்தில் குப்தர்களின் விரிவாக்கம் இருந்தபோதிலும், பிரிதிவிசேனனின் கீழ் வாகாடகர்கள் மத்திய இந்தியாவில் கணிசமான செல்வாக்கைத் தக்கவைத்துக் கொண்டிருந்தாகத் தெரிகிறது. புந்தேல்கண்ட் பகுதியின் இரண்டு கல்வெட்டுகள், பழைய ஜசோ மாநிலத்தில் உள்ள நச்னா அல்லது நச்னே-கி-தலை மற்றும் பழைய அஜய்கர் மாநிலத்தில் உள்ள கஞ்ச் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. அவை வாகாடக மன்னன் பிருதிவிசேனனின் அடிமையாக இருந்ததாகக் கூறும் வியாக்ரதேவா என்ற உள்ளூர் மன்னனைக் குறிப்பிடுகின்றன. [2] இந்தக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள வாகாடக அரசன் "பிரிதிவிசேனன்" முதலாம் பிரிதிவிசேனன் அல்லது பல தலைமுறைகளுக்குப் பிறகு ஆட்சி செய்த இரண்டாம் பிருதிவிசேனன் என்பதில் சில சர்ச்சைகள் உள்ளன. நச்னா மற்றும் கஞ்ச் கல்வெட்டுகளின் பழங்காலத் தனித்தன்மைகள் முந்தைய வாகாடகா கல்வெட்டுகளைப் போலவே இருப்பதால் வியாக்ரதேவன் முதலாம் பிருதிவிசேனனின் அடிமையாக இருந்திருக்கலாம் என்று வரலாற்றாளர் டி.சி.சர்கார் கருதுகிறார். ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இரண்டாம் பிரிதிவிசேனன் ஆட்சி செய்திருக்க வேண்டும். வரலாற்றாளர் ஏ.சி. அல்தேக்கர் இதேபோல் வியாக்ரதேவன் முதலாம் பிரிதிவிசேனனின் அடிமையாக இருந்தான். இரண்டாம் பிரிதிவிசேனனிடம் அல்ல என்று கூறுகிறார். [3] [4]

ஆட்சி

தொகு

பிருதிவிசேனனின் ஆட்சியின் பிற்பகுதியில் இவரது மகன் இரண்டாம் ருத்திரசேனர் குப்த இளவரசி பிரபாவதிகுப்தாவை மணந்தபோது வாகாடக வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று நடந்தது. [5] இந்த திருமணம் அந்த நேரத்தில் இந்தியாவில் இருந்த இரண்டு சக்திவாய்ந்த அரச குடும்பங்களுக்கு இடையே ஒரு கூட்டணியை உறுதி செய்தது. குப்தப் பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தர் தான் தனது மகளின் திருமணத்தை வாகாடக இளவரசருக்கு முன்மொழிந்தார். ஏனெனில் அவர் தனது படைகள் மால்வா மற்றும் குசராத்தில் இருக்கும்போது தனது தெற்கு எல்லையில் ஒரு இணக்கமான கூட்டாளியை விரும்பினார். [6]

விந்தியசேனன் இவரது சமகாலத்தவராக வாகாடக வம்சத்தின் பாசிம் அல்லது வத்சகுல்மா கிளையைச் சேர்ந்த இவரது உறவினர் தெற்கே ஆண்டு வந்தார். வம்சத்தின் இரண்டு கிளைகளுக்கும் இடையிலான உறவு இந்த நேரத்தில் மிகவும் சுமூகமாக இருந்ததாகத் தோன்றுகிறது, பிருதிவிசேனன் தலைமையிலான பிரதான கிளை வத்சகுல்மா கிளையின் மீது பெயரளவு மேலாதிக்கத்தை அனுபவித்து வந்தது. [1]விந்தியசேனன் குந்தள நாட்டைக் கைப்பற்றும்போது, பிருதிவிசேனன் இவருக்குப் பொருள் உதவி வழங்கியிருக்கலாம். இதனால் பிரதான கிளையின் ஆட்சியாளர்கள் "குந்தளாவின் பிரபுக்கள்" என்று அறியப்பட்டனர். [7]

ஆளுமை

தொகு

பிற்கால வாகாடக கல்வெட்டுகளில், பிருதிவிசேனன் நேர்மையான வெற்றியாளர் என்றும் நேர்மை, பணிவு, இரக்கம் மற்றும் மனத்தூய்மை ஆகிய குணங்களைக் கொண்டவராக விவரிக்கப்படுகிறார். [5] இவர் ஒரு 'தர்மவிஜயன்' ("அறத்தின் மூலம் வெற்றி பெறுபவர்") என்று அழைக்கப்பட்டார். மேலும், மகாபாரதத்தின் தருமனுடன் ஒப்பிடப்பட்டார். இவரது தந்தை முதலாம் ருத்ரசேனன் போலவே, இவரும் சிவனை வழிபடுபவராக இருந்துள்ளார்.[8] இவர் முதுமை வரை வாழ்ந்திருக்கலாம். மேலும் ஒரு பெரிய குடும்பத்தை கொண்டிருந்தார். ஏனெனில் வாகாடக கல்வெட்டுகள் இவரை மகன்கள் மற்றும் பேரன்களால் சூழப்பட்ட ஒரு தேசபக்தர் என்று விவரிக்கின்றன. [9] இவருக்குப் பிறகு இவரது மகன் இரண்டாம் ருத்ரசேனன் ஆட்சிக்கு வந்தார்.

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 A.S. Altekar (2007). Majumdar, R.C.; Altekar, A.S. (eds.). The Vakataka-Gupta Age. Motilal Banarsi Dass. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120800434.
  2. D.C. Sircar (1997). Majumdar, R.C. (ed.). The Classical Age (Fifth ed.). Bharatiya Vidya Bhavan. p. 179.
  3. A.S. Altekar (1960). Yazdani, Ghulam (ed.). The Early History of the Deccan. Oxford University Press. p. 173.
  4. Altekar (2007), p. 101
  5. 5.0 5.1 Singh, Upinder (2009). A history of ancient and early medieval India : from the Stone Age to the 12th century. New Delhi: Pearson Longman. p. 482. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1677-9. பார்க்கப்பட்ட நாள் 10 August 2016.
  6. Altekar (2007), pp. 101-102.
  7. Altekar (1960), p. 172
  8. Sircar (1997), p. 178
  9. Altekar (1960), pp. 171-172
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_பிருதிவிசேனன்&oldid=3582423" இலிருந்து மீள்விக்கப்பட்டது