முதலாம் மாதோ சிங்

முதலாம் மாதோ சிங் (Maharaja Sawai Madho Singh I) இந்தியாவின் தற்கால இராஜஸ்தான் மாநிலத்தில் இருந்த ஜெய்பூர் இராச்சியத்தை 1750 முதல் 1768 முடிய 18 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். முதலாம் மாதோ சிங் இரண்டாம் ஜெய் சிங்கின் இளைய மகன் ஆவார். இவரது அண்ணன் இறப்பின் போது, ஜெய்பூர் இராச்சியத்தின் மன்னரானவர்.[1]

முதலாம் மாதோ சிங்
ஜெய்ப்பூர் மகாராஜா
முதலாம் மாதோ சிங்கின் ஓவியம்
ஆட்சிக்காலம்1750 - 1768
பிறப்புடிசம்பர் 1728
இறப்பு5 மார்ச் 1768 (வயது 39)
தந்தைஇரண்டாம் ஜெய் சிங்
மதம்இந்து சமயம்

ஜெய்பூர் இராச்சியத்தை மராத்தியப் பேரரசிடமிருந்து காத்தவர். மன்னர் முதலாம் மாதோ சிங் சவாய் மாதோபூர் நகரத்தை நிறுவியதால், அந்நகரத்திற்கு இம்மன்னரின் பெயரிடப்பட்டது.

மேலும் ஜெய்ப்பூர் நகர அரண்மனை வளாகத்தில் மாதோ விலாஸ், ஜெய் மகால் மற்றும் கோயில்களை நிறுவியவர்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Rulers of Jaipur
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_மாதோ_சிங்&oldid=4060263" இலிருந்து மீள்விக்கப்பட்டது