முதிப்
முதிப் (Mudhif) என்பது தெற்கு ஈராக்கின் வாழும் சதுப்புநில அரேபியர்களால் (மாதன் என்றும் அழைக்கப்படுகிறார்கள்) கட்டமைக்கப்படும் ஒரு பாரம்பரிய நாணல்வீடாகும். பாரம்பரிய மாதன்களின் வாழ்க்கை முறையில், அவர்கள் வாழும் சதுப்பு நிலங்களிலிருந்து அறுவடை செய்யப்பட்ட நாணல்களிலிருந்து வீடுகள் கட்டப்படுகின்றன. ஒரு முதிப் என்பது ஒரு பெரிய சடங்கு வீடு, உள்ளூர் சேக்கால் பணம் செலுத்தி பராமரிக்கப்படுகிறது. விருந்தினர்கள் பயன்படுத்தவும், திருமணங்கள், இறுதி சடங்குகள் போன்றவற்றிற்கான ஒன்றுகூடும் இடமாக உள்ளது.
விளக்கம்
தொகுஇதன் கட்டமைப்புகள் தெற்கு ஈராக்கில் சதுப்பு நில அரேபியர்களால் குறைந்தது 5,000 ஆண்டுகளாக கட்டப்பட்ட பாரம்பரிய வகை கட்டமைப்புகளில் ஒன்றாகும். பொ.ச.மு. 3,300-க்கு முந்தைய ஒரு பொதுவான முதிப்பின் எச்சங்கள் உரூக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது. [1]
ஒரு முதிப் என்பது சதுப்பு நிலங்களில் இயற்கையாக வளரும் நாணல்களிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இது, கிராமத்து சேக்கால் விருந்தினர் மாளிகையாக பயன்படுத்தப்படுகிறது. [2] ரபா (இரு முனைகளிலும் நுழைவாயில்கள் மற்றும் ஒரு குடும்ப வாழிடமாகப் பயன்படுத்தப்படுகிறது) அல்லது ஒரு பேட் ( ஒரு ஒற்றை அறை வசிப்பிடம்) போன்ற பிற வகையான நாணல் வசிப்பிடங்கள் பொதுவாக ஒரு முதிப்பை விட சிறியவை. மேலும், அவை குடியிருப்பாகவும், பிற நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படலாம். [3]
ஒவ்வொரு கிராம சேக்கிடமும் குறைந்தது பத்து பேருக்கு இடமளிக்கும் திறன் கொண்ட ஒரு முதிப் இருந்தது. ஒரு முதிபில் பயன்படுத்தப்படும் வளைவுகளின் எண்ணிக்கை பழங்குடி மற்றும் குடும்பக் குழுவால் தீர்மானிக்கப்படுகிறது. [4] சில நேரங்களில் முதிப் கூடுதல் மூட்டை நாணல்களால் அலங்கரிக்கப்பட்டு, அலங்கார வடிவங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு, முகப்பில் வைக்கப்பட்டு, பழங்குடி அடையாளங்காட்டியாக இருக்கிறது. [5] முதிபின் நுழைவு எப்போதும் மக்காவை எதிர்கொள்கிறது. [6]
கட்டுமானம்
தொகுஒரு முதிப் கட்டுமானத்தில், நாணல் தொகுக்கப்பட்டு தடிமனான நெடுவரிசைகளில் நெய்யப்படுகின்றன; பெரிய மற்றும் அடர்த்தியான நாணல் குறுக்கே வளைந்து கட்டடத்தின் முதுகெலும்பை உருவாக்கும் பரவளைய வளைவுகளை உருவாக்குகின்றன. [7] இந்த வளைவுகள் நெடுவரிசைகளின் முன் அழுத்தத்தால் பலப்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அவை ஆரம்பத்தில் எதிரெதிர் கோணங்களில் மண்ணில் செருகப்படுகின்றன. [8] தொடர்ச்சியான வளைவுகள் கட்டிடத்தின் வடிவத்தை வரையறுக்கின்றன. சிறிய தொகுக்கப்பட்ட நாணல்களின் நீண்ட குறுக்கு விட்டங்கள் வளைவுகளுக்கு குறுக்கே போடப்பட்டு கட்டப்பட்டுள்ளன. நாணல்களின் நெய்த பாய்கள் கட்டிட உறை உருவாகின்றன. சில பாய்கள் ஒளி மற்றும் காற்றோட்டத்தை அனுமதிக்க கண்ணி போன்ற துளைகளுடன் நெய்யப்படுகின்றன.
பயன்
தொகுஒரு முதிப் விருந்தினர் மாளிகையாகவோ அல்லது சடங்கு சந்தர்ப்பங்களுக்காகவோப் பயன்படுத்தப்படுகிறது. வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படுத்துவதில்லை. ஒரு விருந்தினர் ஒரு முதிபிற்குள் நுழையும் போது, கிராமத்து ஷேக்கால் வரவேற்கப்படுவார்கள், அவர்களுடைய சரியான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் மற்றும் சடங்கு செய்யப்பட்ட விழாவில் அதிக இனிப்பு காப்பி போன்ற சிற்றுண்டிகளை வழங்குவார்கள். [9]
சமீபத்திய முன்னேற்றங்கள்
தொகு1980 களில், சுமார் அரை மில்லியன் அரேபியர்கள் சதுப்பு நிலங்களில் வாழ்ந்தனர். [10] இருப்பினும், 1993 ஆம் ஆண்டிலிருந்து, தெற்கு அரேபியர்களின் வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் அழிக்கும் முயற்சியில் சதாம் உசேன் சதுப்பு நிலங்களை வடிகட்டத் தொடங்கினார். [11] 2003 இல் உசேனின் தோல்வியைத் தொடர்ந்து, அரபு சமூகங்கள் சதுப்பு நிலங்களை மீண்டும் வெள்ளத்தில் மூழ்கடித்து, தங்கள் பாரம்பரிய வாழ்க்கை முறையை மீண்டும் தொடங்கின. [12]
மேற்கோள்கள்
தொகு- ↑ Broadbent, G., "The Ecology of the Mudhif," in: Geoffrey Broadbent and C. A. Brebbia, Eco-architecture II: Harmonisation Between Architecture and Nature, WIT Press, 2008, pp 15-26
- ↑ Ochsenschlager, E.L., Iraq's Marsh Arabs in the Garden of Eden, University of Pennsylvania Press, 2004, p. 162
- ↑ Ochsenschlager, E.L., Iraq's Marsh Arabs in the Garden of Eden, University of Pennsylvania Press, 2004, pp. 145-46
- ↑ The National Geographic Magazine, Vol. 113, 1958, p. 214
- ↑ Van de Noort, E., Climate Change Archaeology: Building Resilience from Research in the World's Coastal Wetlands, Oxford, Oxford University Press, 2013, p. 216
- ↑ The National Geographic Magazine, Vol. 113, 1958, p. 214
- ↑ "HugeDomains.com - FbMonitor.com is for sale (Fb Monitor)". www.hugedomains.com. Archived from the original on 2020-01-29. பார்க்கப்பட்ட நாள் 2019-10-30.
{{cite web}}
: Cite uses generic title (help) - ↑ Mudhif," in Encyclopedia Britannica, Online:
- ↑ Ochsenschlager, E.L., Iraq's Marsh Arabs in the Garden of Eden, University of Pennsylvania Press, 2004, pp. 145-46
- ↑ "Total numbers of Marsh Arabs" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2019-10-30.
- ↑ "The Iraqi Government Assault on Marsh Arabs" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2019-10-30.
- ↑ Blue, Circle of (2013-09-04). "Iraq's First National Park: A Story of Destruction and Restoration in the Mesopotamian Marshlands". Circle of Blue (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-30.
வெளி இணைப்புகள்
தொகு- Mudhif under construction and the Marsh Arabs