சதுப்புநில அரேபியர்கள்

சதுப்புநில அரேபியர்கள் (Marsh Arabs) மாதன் எனவும், சுரூக் எனவும், அறியப்படும் இவர்கள் ஈராக்கின் தெற்கில் உள்ள டைகிரிசு இயுப்ரிடீசு சதுப்பு நிலங்களிலும், ஈராக் மற்றும் ஈரானின் எல்லையில் உள்ள அவிசே சதுப்பு நிலங்களிலும் வசிப்பவர்கள் ஆவர். அல் பு முசம்மத், பெரெய்காட், சாகன்பா மற்றும் பானி லாம் போன்ற பல பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் கூட்டமைப்புகளை உள்ளடக்கிய இவர்கள் சதுப்பு நிலங்களின் இயற்கை வளங்களை மையமாகக் கொண்ட ஒரு தனித்துவமான கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளனர். ஈராக்கில் 1991 எழுச்சியின் போதும் அதற்குப் பின்னரும் ஈரநிலங்கள் மீட்கப்பட்டபோது சதுப்பு நில மக்கள் பலரும் இடம்பெயர்ந்தனர்.

சதுப்புநில அரேபியர்கள்
ஈராக்கின் அல் குர்ராவைச் சேர்ந்த சதுப்புநில அரபு பெண்.
மொத்த மக்கள்தொகை
200,000[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 ஈராக்,  ஈரான்100,00–200,000[1]
மொழி(கள்)
மெசொப்பொத்தேமிய அரபி
சமயங்கள்
முக்கியமாக பன்னிருவர், சியா இசுலாம் சியா இசுலாம்[2]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மாண்டேயர்கள், சுமேரியா

கலாச்சாரம்

தொகு
 
ஒரு ஈராக் பாரம்பரிய நாணல் வீட்டின் உட்புறம்

ஈராக் நதிப் படுகைகளில் வசிப்பவர்களையும், சதுப்பு நிலங்களின் மக்கள்தொகையைக் குறிக்க நதிப் படுகைகளில் விவசாயம் செய்தவர்களையும் குறிக்க பாலைவன பழங்குடியினரால் மாதன் என்ற சொல் இழிவாகப் பயன்படுத்தப்பட்டது. [3]

இவர்கள் உள்ளூர் மெசொப்பொத்தேமிய அரபியைப் பேசுகிறன்றனர். மேலும், பாரம்பரியமாக சாதாரண அரபு உடையை அணிந்து கொள்கின்றனர். சமீபத்திய காலங்களில், எப்போதாவது மேலே ஒரு மேற்கத்திய பாணி ஜாக்கெட்டுடனும், ஒரு தலைப்பாகை தலையைச் சுற்றி கட்டப்பட்டிருக்கும்.

வேளாண்மை

தொகு

சதுப்பு நில அரேபியச் சமூகம் தங்களின் தொழிலகளால் இரண்டு முக்கிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு குழு நீர் எருமைகளை வளர்த்து வருகிறது. மற்றவர்கள் அரிசி, வாற்கோதுமை, கோதுமை, கம்பு போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்; அவர்களில் சிலர் ஆடுகளையும் கால்நடைகளையும் வைத்திருக்கிறார்கள். நெல் சாகுபடி குறிப்பாக முக்கியமானது; இது ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்து, மே மாத நடுப்பகுதியில் விதைக்கப்பட்ட சிறிய திட்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. கார்த்திகை மற்றும் சிரியஸ் போன்ற சில நட்சத்திரங்களின் உயர்வு மற்றும் அமைப்பால் சாகுபடி பருவங்கள் குறிக்கப்பட்டன. [4]

இவர்களின் சில கிளைகள் நாடோடிகளாக காலநடைகளை மேய்த்தல், பருவகாலத்திற்கு ஏற்ப தற்காலிக குடியிருப்புகளை அமைத்தல், சதுப்பு நிலங்களைச் சுற்றி எருமைகளை நகர்த்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் மீன்பிடித்தலில் ஈட்டிகளில் விஷத்தைப் பயன்படுத்தி பயிற்சி பெற்றுள்ளனர். ஆனால் வலைகளைப் பயன்படுத்தி பெரிய அளவிலான மீன்பிடித்தல் சமீபத்திய காலங்களில் ஒரு அவமரியாதைக்குரிய தொழிலாகக் கருதப்படுகிறது. இது பெரும்பாலும் பெர்பெரா என அழைக்கப்படும் ஒரு தனி குறைந்த-நிலை பழங்குடியினரால் மேற்கொள்ளப்படுகிறது. [5] இருப்பினும், 1990 களின் முற்பகுதியில், ஈராக்கின் உள்நாட்டு நீரில் பிடிபட்ட மொத்த மீன்களில் 60% வரை சதுப்பு நிலங்களிலிருந்து வந்தன.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மூன்றாவது முக்கிய தொழில் இவர்களின் வாழ்க்கையில் நுழைந்தது; வணிக அளவில் பாய்களை நெசவு செய்தல். அவர்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்களை விட அதிகமாக சம்பாதித்திருந்தாலும், நெசவாளர்களை இவர்களும், விவசாயிகளும் ஒரே மாதிரியாகக் குறைத்துப் பார்த்தார்கள்: இருப்பினும், நிதிக் கவலைகள் என்பது படிப்படியாக ஒரு மரியாதைக்குரிய தொழிலாக ஏற்றுக்கொள்ளப்படுவதைக் குறிக்கிறது.

உசேனின் அரசாங்கத்தால் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு சில காலமாக இந்த சதுப்பு நிலங்கள் ஒரு அடைக்கலமாக கருதப்பட்டன. கடந்த நூற்றாண்டுகளில் இவர்கள் சாஞ்ச் கிளர்ச்சியின் போது தப்பித்த அடிமைகள் மற்றும் பண்ணையடிமைகளுக்கு அடைக்கலமாக இருந்தனர். 1980 களின் நடுப்பகுதியில், பாத்திஸ்ட் வடிகால் மற்றும் மீள்குடியேற்ற திட்டங்களுக்கு எதிரான ஒரு குறைந்த அளவிலான கிளர்ச்சி இப்பகுதியில் எழுந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 USAID பரணிடப்பட்டது 2014-11-11 at the வந்தவழி இயந்திரம், iraqmarshes.org
  2. Thesiger, p.127
  3. வில்பிரட் தீசிசர், The Marsh Arabs, Penguin, 1967, p.92
  4. Thesiger, p.174
  5. Thesiger, p.92

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுப்புநில_அரேபியர்கள்&oldid=3664125" இலிருந்து மீள்விக்கப்பட்டது