முதுகெலும்பிகளின் தொல்லுயிரியல் (நூல்)

முதுகெலும்பிகளின் தொல்லுயிரியல் (Vertebrate Paleontology) என்பது சிகாகோ பல்கலைக்கழக பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஆல்பிரட் ஷெர்வுட் ரோமர் எழுதிய முதுகெலும்புடைய உயிரிகளின் தொல்லுயிரியல் குறித்த உயர்கல்வி நூலாகும்.[1] இந்நூலின் மூன்று பதிப்புகள் முறையே 1933, 1945, 1966 ஆகிய ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்டன. பல ஆண்டுகளாக இந்நூலே முதுகெலும்பிகளின் அதிகாரப்பூர்வ மேற்கோள் நூலாக விளங்கியது.[2] டி.எஸ். பார்சனாலைத் துணை ஆசிரியராகக் கொண்டு ஒப்பீட்டு உடற்கூறியலை மையமாக்கிய சுருக்கத் தொகுப்பானது 1977ஆம் ஆண்டும் 1985ஆம் ஆண்டும் அச்சிடப்பட்டது.[3] 1988 ஆம் ஆண்டு ராபர்ட் எல். கரோல் எழுதிய முதுகெலும்பிகளின் தொல்லுயிரியல் மற்றும் பரிணாமம் (Vertebrate Paleontology and Evolution) என்ற நூல் ரோமரின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது.[4] ரோமரின் புத்தகம் அழிந்துபோன மற்றும் தற்போதைய முதுகெலும்பு உயிரிகள் குறித்த விரிவான தகவல்களைக் கொண்டுள்ளது. மேலும் பாலூட்டியினை ஒத்த ஊர்வன குறித்துக் குறிப்பாகக் கூறப்பட்டுள்ளது ரோமரின் முக்கிய ஆர்வத்தினை காட்டுவதாக இருக்கின்றது.[4] புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள விலங்கின வகைப்பாட்டுப் பட்டியல் சிறப்பிடம் பெறுவதாக உள்ளது. ஏனெனில் இப்புத்தகம் வெளியிடப்பட்ட நேரத்தில் அறியப்பட்ட ஒவ்வொரு விலங்கினத்தினையும் உள்ளடக்கியதோடு, விலங்குகளின் வாழிடம், பாறை அடுக்குகளில் படிந்துள்ள புதைபடிவ விலங்குகளை விவரிப்பதாகவும் உள்ளது.

முதுகெலும்பிகளின் தொல்லுயிரியல்
1947 பதிப்பு
நூலாசிரியர்ஆல்பிரட் செர்வுட் ரோமர்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பொருண்மைமுதுகெலும்பிகளின் தொல்லுயிரியல்
வெளியிடப்பட்டது1933, 1945, 1966
வெளியீட்டாளர்சிக்காகோ பல்கலைக்கழகப் பதிப்பகம்
ஊடக வகைபாடநூல்
ISBN0-7167-1822-7 (3வது பதிப்பு)

மேற்கோள்கள் தொகு

  1. Romer, A.S. (1966): Vertebrate Paleontology. University of Chicago Press, Chicago; 3rd edition ISBN 0-7167-1822-7
  2. Smith, C.H. (2005): Romer, Alfred Sherwood (United States 1894-1973), homepage from Western Kentucky University
  3. Romer, A.S. & T.S. Parsons. 1977. The Vertebrate Body. 5th ed. Saunders, Philadelphia. (6th ed. 1985)
  4. 4.0 4.1 Ryan, M.J. "Died This Day: Alfred Sherwood Romer, Dec. 28, 1894 – Nov. 5, 1973". Palaeoblog. பார்க்கப்பட்ட நாள் 14 June 2012.