முத்தனஹள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்

முத்தம்பட்டி அல்லது முத்தனஹள்ளி ( Muthnahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1][2] வேப்பனபள்ளி சட்டமன்றத் தொகுதிக்கும் தொட்டதிம்மன அள்ளி ஊராட்சிக்கும் உட்பட்ட, இந்த ஊரானது இராயக்கோட்டை - கெலமங்கலம் சாலையில் அமைந்துள்ளது.

முத்தனஹள்ளி
முத்தம்பட்டி
ஊரில் உள்ள திம்மராயசாமி கோயில்
ஊரில் உள்ள திம்மராயசாமி கோயில்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635116

விளக்கம்

தொகு

இந்த ஊரானது அரசு ஆவணங்களில் முத்தனஹள்ளி என்ற கன்னடப் பெயரால் குறிக்கப்படுகிறது. ஆனால் நடைமுறையில் அச்சொல்லுக்கு இணையான தமிழ் பெயரான முத்தம்பட்டி என்ற பெயரே பயன்பாட்டில் உள்ளது. இவ்வூரானது மாவட்டத் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 45 கிமீ தொலைவிலும், ஒசூரில் இருந்து 33 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்த ஊர் மக்களின் முதன்மைத் தொழில் வேளாண்மை ஆகும். அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் இராயக்கோட்டை தொடர்வண்டி நிலையம் மற்றும் கெலமங்கலம் தொடர்வண்டி நிலையம் ஆகும்.

ஊரில் உள்ள கோயில்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-18. பார்க்கப்பட்ட நாள் 2013-02-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தனஹள்ளி&oldid=3915854" இலிருந்து மீள்விக்கப்பட்டது