முப்பியூட்டைல்வெள்ளீய ஆக்சைடு
முப்பியூட்டைல்வெள்ளீய ஆக்சைடு (Tributyltin oxide) என்பது [(C4H9)3Sn]2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமவெள்ளீய சேர்மமான இதை டிரைபியூட்டைல்டின் ஆக்சைடு என்ற பெயரால் அழைக்கிறார்கள். பூஞ்சைக் கொல்லி, மெல்லுடலிக் கொல்லி போன்ற உயிர்க்கொல்லிகளாக, குறிப்பாக மரப் பாதுகாப்புப் பொருளாக முப்பியூட்டைல்வெள்ளீய ஆக்சைடு பயன்படுகிறது. நிறமற்றும். வெளிர்மஞ்சள் நிறத்திலும் ஒரு நீர்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. தண்ணீரில் சிறிதளவும் (மில்லியனுக்கு 20 பகுதிகள்) கரிமக் கரைப்பான்களில் நன்றாகவும் கரைகிறது. தோலில் எரிச்சலை உண்டாக்குகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எக்சாபியூட்டைல்டைசிடானாக்சேன்
| |
வேறு பெயர்கள்
பிசு(டிரைபியூட்டைடின்) ஆக்சைடு, பிசு(டிரை-என்-பியூட்டைல்டின்)ஆக்சைடு, ஏடபிள்யூ 75-டி, பயோ-மெட் டிபிடிஓ, பயோமெட், பயோமெட் 75, பிடிஓ, பியூட்டினாக்சு, சி-எசு.என்-9
| |
இனங்காட்டிகள் | |
56-35-9 | |
ChEMBL | ChEMBL511667 |
ChemSpider | 10218152 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C18149 |
பப்கெம் | 16682746 |
| |
பண்புகள் | |
C24H54OSn2 | |
வாய்ப்பாட்டு எடை | 596.112 |
உருகுநிலை | −45 °C (−49 °F; 228 K) |
கொதிநிலை | 180 °C (356 °F; 453 K) 2 மி.மீ Hg அழுத்தத்தில் |
0.002 கிராம்/100 மி.லி | |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R21 R25 R36/38 R48/23/25 R50/53 |
S-சொற்றொடர்கள் | S36/37/39 S45 S60 S61 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கடலில் பயன்படுத்தப்படும் பொருட்களின் நீர் மேற்பரப்புகள் நுண்ணுயிர்களால் சிதிலமடைவதை தடுக்கும் முகவராக முப்பியூட்டைல்வெள்ளீய ஆக்சைடு சேர்மங்கள் பயன்படுகின்றன. இந்தச் சேர்மத்தின் நச்சுத்தன்மையைக் குறித்த கவலைகள் சர்வதேச கடல்சார் அமைப்பு மூலம் உலகளாவிய தடைக்கு வழிவகுத்தன[1]. இப்போது இது ஒரு கடுமையான கடல் மாசுபாடு என்றும், மிகுந்த அக்கறையுடன் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தால் கருதப்படுகிறது[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Focus on IMO - Anti-fouling systems". International Maritime Organisation. http://www.imo.org/OurWork/Environment/Anti-foulingSystems/Documents/FOULING2003.pdf.
- ↑ Organotin Chemistry, Second Edition. Alwyn G. Davies, 2004, Wiley-VCH Verlag GmbH & Co. KGaA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-31023-1