முப்பீனைல்சிடைபின்
முப்பீனைல்சிடைபின் (Triphenylstibine) Sb(C6H5)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். முப்பீனைலாண்டிமனி என்ற பெயராலும் இதை அழைக்கலாம். இந்த நிறமற்ற திண்மப்பொருள் பெரும்பாலும் முன்மாதிரியான கரிமஆண்டிமனி சேர்மமாகக் கருதப்படுகிறது. ஒருங்கிணைப்பு வேதியியலில் இது ஈந்தணைவியாகவும்[2] கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு வினையாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
முப்பீனைல்சிடைபேன் | |
வேறு பெயர்கள்
முப்பீனைலாண்டிமனி
| |
இனங்காட்டிகள் | |
603-36-1 | |
ChemSpider | 11284 |
EC number | 210-037-6 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11777 |
வே.ந.வி.ப எண் | WJ1400000 |
| |
UNII | G1X1263AMM |
பண்புகள் | |
C18H15Sb | |
வாய்ப்பாட்டு எடை | 353.07 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
அடர்த்தி | 1.53 கி/செ.மீ3 |
உருகுநிலை | 52 முதல் 54 °C (126 முதல் 129 °F; 325 முதல் 327 K) |
கொதிநிலை | 377 °C (711 °F; 650 K) |
கரையாது | |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | இலேசான நஞ்சு |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H302, H332, H411 | |
P261, P264, P270, P271, P273, P301+310, P301+312, P304+312, P304+340, P312, P330, P391, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தொடர்புடைய மூலக்கூறுகளான முப்பீனைலமீன், முப்பீனைல்பாசுபீன் மற்றும் முப்பீனைலார்சின் போலவே முப்பீனைல்சிடைபின் சேர்மமும் பீனைல் குழுக்களின் முற்செலுத்து சுழலி போன்ற அமைப்பைக் கொண்ட பிரமிடு வடிவத்திலுள்ளது. Sb-C பிணைப்பு தூரங்கள் சராசரியாக 2.14-2.17 Å ஆகவும் C-Sb-C பிணைப்புக் கோணம் 95° ஆகவும் காணப்படுகிறது.[3]
SbPh3 முதன்முதலில் 1886 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. ஆண்டிமனி முக்குளோரைடிலிருந்து வேதிவினை மூலம் தயாரிக்கப்பட்டது:[4]:
- 6 Na + 3 C6H5Cl + SbCl3 → (C6H5)3Sb + 6 NaCl
பீனைல்மக்னீசியம் புரோமைடுடன் ஆண்டிமனி முக்குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து முப்பீனைல்சிடைபின் தயாரிப்பது மாற்று தயாரிப்பு முறையாகும்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Triphenylantimony". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 December 2021.
- ↑ C. A. McAuliffe, ed. (1973). Transition Metal Complexes of Phosphorus, Arsenic, and Antimony Ligands. J. Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-470-58117-4.
- ↑ Adams, E. A.; Kolis, J. W.; Pennington, W. T. "Structure of triphenylstibine" Acta Crystallographica 1990, volume C46, pp. 917-919. எஆசு:10.1107/S0108270189012862
- ↑ Michaelis, A.; Reese, A. "Ueber die Verbindungen der Elemente der Stickstoffgruppe mit den Radicalen der aromatischen Reihe. Achte Abhandlung Ueber aromatische Antimonverbindungen" Liebigs Annallen der Chemie volume 233, pages 39-60 (1886). எஆசு:10.1002/jlac.18862330104.
- ↑ Hiers, G. S. (1927). "Triphenylstibine". Organic Syntheses 7: 80. doi:10.15227/orgsyn.007.0080.