முப்பீனைல் பாசுபைட்டு

வேதிச் சேர்மம்

முப்பீனைல் பாசுபைட்டு (Triphenyl phosphite) என்பது P(OC6H5)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம பாசுபரசு சேர்மமாகும். நிறமற்றதாகவும் பிசுபிசுப்புத்தன்மை கொண்ட நீர்மமாகவும் இது காணப்படுகிறது.

முப்பீனைல் பாசுபைட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
முப்பீனைல் பாசுபைட்டு
இனங்காட்டிகள்
101-02-0 Y
ChemSpider 7259 Y
InChI
  • InChI=1S/C18H15O3P/c1-4-10-16(11-5-1)19-22(20-17-12-6-2-7-13-17)21-18-14-8-3-9-15-18/h1-15H Y
    Key: HVLLSGMXQDNUAL-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C18H15O3P/c1-4-10-16(11-5-1)19-22(20-17-12-6-2-7-13-17)21-18-14-8-3-9-15-18/h1-15H
    Key: HVLLSGMXQDNUAL-UHFFFAOYAF
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7540
  • O(P(Oc1ccccc1)Oc2ccccc2)c3ccccc3
UNII 9P45GRD24X N
பண்புகள்
C18H15O3P
வாய்ப்பாட்டு எடை 310.28 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.184 கி/மில்லி லிட்டர்
உருகுநிலை 22 முதல் 24 °C (72 முதல் 75 °F; 295 முதல் 297 K)
கொதிநிலை 360 °C (680 °F; 633 K)
குறைவு
கரைதிறன் கரிமக் கரைப்பான்கள்
-183.7·10−6செ.மீ3/மோல்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

வினையூக்கி அளவு காரத்தின் முன்னிலையில் பாசுபரசு முக்குளோரைடுடன் பீனாலைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் முப்பீனைல் பாசுபைட்டு உருவாகிறது.

PCl3 + 3 HOC6H5 → P(OC6H5)3 + 3 HCl

வினைகள்

தொகு

மும்மெத்தில்பாசுபீன் தயாரிப்பதற்கான முன்னோடி சேர்மமாக முப்பீனைல் பாசுபைட்டு பயன்படுத்தப்படுகிறது. பாசுபரசு முக்குளோரைடை விட குறைவான மின் கவர் தன்மை கொண்டுள்ள P3+ அயனியின் ஆதாரமாகவும் செயல்படுகிறது:[1]

(C6H5O)3P + 3 CH3MgBr → P(CH3)3 + 3 "MgBrOC6H5"

முப்பீனைல் பாசுபைட்டு மெத்தில் அயோடைடால் நான்கிணையச் சேர்மமாக்கப்படுகிறது:[2]

(C6H5O)3P + CH3I → [CH3(C6H5O)3P]+I

ஒருங்கிணைவுச் சேர்மங்கள்

தொகு

ஒருங்கிணைவு வேதியியலில் முப்பீனைல் பாசுபைட்டு ஒரு பொதுவான ஈந்தணைவியாகும். M[P(OC6H5)3]4 (M = Ni, Pd, Pt) என்ற வகையிலான சுழிய இணைதிறன் அணைவுச் சேர்மங்களை இது உருவாக்குகிறது. பிசு(வளைய ஆக்டா டையீன்)நிக்கல் சேர்மத்திலிருந்து டையீனை இடப்பெயர்ச்சி செய்யும் வினையின் மூலமாக நிக்கல் அணைவுச் சேர்மங்களை தயாரிக்கலாம்:[3]

Ni(COD)2 + 4 P(OC6H5)3 → Ni[P(OC6H5)3]4 + 2 COD

தொடர்புடைய அணைவுச் சேர்மங்கள் ஆல்க்கீன்களின் ஐதரோசயனேற்றத்திற்கான ஒருபடித்தான வினையூக்கிகளாகும். இது Fe(0) மற்றும் Fe(II) சேர்மங்களான ஈரைதரைடு H2Fe[P(OC6H5)3]4 போன்ற பல்வேறு வகையான சேர்மங்களையும் உருவாக்குகிறது.[4]

பல்லுருவமாக்கம்

தொகு

கரிமச் சேர்மங்களில் உள்ள பல்லுருவமாக்கச் சேர்மங்களுக்கு முப்பீனைல் பாசுபைட்டு ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு ஆகும். அதாவது சுமார் 200 கெல்வின் வெப்பநிலையில் இரண்டு வெவ்வேறு படிகவடிவமற்ற வடிவங்களில் காணப்படுகிறது.[5] முப்பீனைல் பாசுபைட்டின் ஒரு பல்லுருவமாக்க வடிவச் சேர்மம் அயனத் திரவங்களின் படிகமாக்கல் மூலம் பெறப்பட்டது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Leutkens, Jr., M. L.; Sattelberger, A. P.; Murray, H. H.; Basil, J. D.; Fackler, Jr. J. P. (1990). "Trimethylphosphine". Inorganic Syntheses 28: 305–310. doi:10.1002/9780470132593.ch76. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470132593. 
  2. H. N. Rydon (1971). "Alkyl Iodides: Neopentyl Iodide and Iodocyclohexane". Organic Syntheses 51: 44. doi:10.15227/orgsyn.051.0044. 
  3. Ittel, Steven D. (1977). "Olefin, Acetylene, Phosphine, Isocyanide, and Diazene Complexes of Nickel(0)". Inorganic Syntheses. Inorganic Syntheses. Vol. XVII. pp. 117–124. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132487.ch34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132487.
  4. Gerlach, D. H.; Peet, W. G.; Muetterties, E. L. (1972). "Stereochemically Nonrigid Six-Coordinate Molecules. II. Preparations and Reactions of Tetrakis(organophosphorus)metal Dihydride Complexes". Journal of the American Chemical Society 94 (13): 4545. doi:10.1021/ja00768a022. 
  5. Ha, Alice; Cohen, Itai; Zhao, Xiaolin; Lee, Michelle; Kivelson, Daniel (1996). "Supercooled Liquids and Polyamorphism†". The Journal of Physical Chemistry 100: 1–4. doi:10.1021/jp9530820. 
  6. D.G. Golovanov, K.A. Lyssenko, M.Yu. Antipin, Ya.S. Vygodskii, E.I. Lozinskaya, A.S. Shaplov. ”Long-awaited polymorphic modification of triphenyl phosphite“, Cryst. Eng. Comm., 2005, v. 7, no. 77, P.465 – 468. doi: 10.1039/b505052a
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பீனைல்_பாசுபைட்டு&oldid=3422765" இலிருந்து மீள்விக்கப்பட்டது