முப்பீனைல் பாசுபைட்டு ஓசோனைடு

வேதிச் சேர்மம்

முப்பீனைல் பாசுபைட்டு ஓசோனைடு (Triphenyl phosphite ozonide) என்பது PO3(C6H5O)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒற்றை ஆக்சிசனை உருவாக்க இச்சேர்மம் பயன்படுகிறது.[1][2]

முப்பீனைல் பாசுபைட்டு ஓசோனைடு
Triphenyl phosphite ozonide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4,4,4-முப்பீனாக்சி-1,2,3,4λ5-மூவாக்சாபாசுபேட்டேன்
இனங்காட்டிகள்
29833-83-8 Y
Abbreviations TPPO
InChI
  • InChI=1S/C18H15O6P/c1-4-10-16(11-5-1)19-25(23-22-24-25,20-17-12-6-2-7-13-17)21-18-14-8-3-9-15-18/h1-15H
    Key: BVCCTQHXJQXLKM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12503112
  • C1=CC=C(C=C1)OP2(OOO2)(OC3=CC=CC=C3)OC4=CC=CC=C4
பண்புகள்
C18H15O6P
வாய்ப்பாட்டு எடை 358.29 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

முப்பீனைல் பாசுபைட்டு ஓசோனைடு அமீன்களுடன் கலக்கும்போது, ஓசோனைடு ஒற்றை ஆக்சிசனாக உடைந்து முப்பீனைல் பாசுபைட்டை விட்டுச் செல்கிறது.[2] பிரிடின் மட்டுமே முப்பீனைல் பாசுபைட்டு ஓசோனைட திறம்பட உடைக்கும் ஓர் அறியப்பட்ட அமீன் ஆகும்.[1][2]

தயாரிப்பு

தொகு

உலர் ஓசோனை இருகுளோரோமெத்தேனில் குமிழிப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது. இச்செயல்முறையின்போது முப்பீனைல் பாசுபைட்டை -78 ° செல்சியசு வெப்பநிலையில் துளித் துளியாக சேர்க்கப்பட வேண்டும்.[2] ஒருவேளை இத்தொகுப்பு வினையில் முப்பீணைல் பாசுபைட்டு அதிகமாக சேர்க்கப்பட்டால், முப்பீணைல் பாசுபைட்டு ஆக்சைடும் ஆக்சிசனும் உருவாகும்.[3]

மேற்கோள்கள்

தொகு