முப்புளோரோநைத்திரசோமெத்தேன்
முப்புளோரோநைத்திரசோமெத்தேன் (Trifluoronitrosomethane) CF3NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நச்சு வேதிப்பொருளான இதில் முப்புளோரோமெத்தில் குழுவானது நைட்ரசோ குழுவுடன் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டிருக்கும். முப்புளோரோநைத்திரசோமெத்தேனின் தனித்துவமான ஆழ்ந்த நீல நிறம் வாயுக்களில் அசாதாரணமான நிறமாகும்.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
முப்புளோரோ(நைத்திரசோ)மெத்தேன் | |
வேறு பெயர்கள்
முப்புளோரோ-நைத்திரசோமெத்தேன்
முப்புளோரோ-நைத்திரசோ-மெத்தேன் நைத்திரசோமுப்புளோரோமெத்தேன் | |
இனங்காட்டிகள் | |
334-99-6 | |
ChemSpider | 60949 |
EC number | 206-383-2 |
InChI
| |
பப்கெம் | 67630 |
பண்புகள் | |
CF3NO | |
வாய்ப்பாட்டு எடை | 99.01 g·mol−1 |
தோற்றம் | ஆழ்ந்த நீல நிற வளிமம் ஊதா நிறத் திண்மம் |
உருகுநிலை | −196.6 °C (−321.9 °F; 76.5 K) |
கொதிநிலை | −85 °C (−121 °F; 188 K) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வரலாறு
தொகுமுப்புளோரோநைத்திரசோமெத்தேன் முதன் முதலில் 1936 ஆம் ஆண்டு ஓட்டோ ரஃப் மற்றும் மன்ஃபிரெட்டு கீசு ஆகியோரால் போலந்து நாட்டின் உரோக்லா பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்டது. [1] வெள்ளி நைட்ரேட்டு மற்றும் வெள்ளி ஆக்சைடு முன்னிலையில் வெள்ளி சயனைடை புளோரினேற்றம் செய்து அப்போது இதை உருவாக்கினர்.
தயாரிப்பு
தொகுசாதாரண அழுத்தத்தில் புற ஊதா ஒளியில் முப்புளோரோ அயோடோமெத்தேனுடன் நைட்ரிக் ஆக்சைடைச் சேர்த்து முப்புளோரோநைத்திரசோமெத்தேன் பெருமளவில் கிட்டத்தட்ட 90 சதவீதம் அளவிற்கு தயாரிக்கமுடியும். இவ்வினைக்கு வினையூக்கியாக சிறிதளவு பாதரசம் தேவைப்படுகிறது. வினையின் விளைவாக அயோடின் ஓர் உடன் விளைபொருளாக உருவாகிறது. [2][3][4]
பண்புகள்
தொகுமுப்புளோரோநைத்திரசோமெத்தேன் அடர் நீல நிறத்திலான ஒரு வாயுவாகும். [5] புளோரின் பதிலீடுகள் காரணமாக இச்சேர்மம் இயக்க ரீதியாக ஓரளவு நிலைத்தன்மையுடன் இருந்தாலும், மற்ற நைட்ரோசோ சேர்மங்களைப் போலவே முப்புளோரோநைத்திரசோமெத்தேன் பலவீனமான 39.9 கிலோகலோரி/மோல் மட்டுமே C-N பிணைப்பைக் கொண்டுள்ளது. [6]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Otto Ruff; Giese, Manfred (1936). "Das Trifluor-nitroso-methan, CF3.NO (III.)". Ber Dtsch Chem Ges 69 (4): 684–689. doi:10.1002/cber.19360690411.
- ↑ Senning, Alexander (1964). "N-, 0-, and S-trihalomethyl compounds". Chemical Reviews 65 (4): 385–412. doi:10.1021/cr60236a001.
- ↑ Taylor, C. W.; Brice, T. J.; Wear, R. L. (1962). "The Preparation of Polyfluoronitrosoalkanes from Nitrosyl Polyfluoroacylates". Journal of Organic Chemistry 27 (3): 1064–1066. doi:10.1021/jo01050a523.
- ↑ Park, J. D.; Rosser, R. W.; Lacher, J. R. (1962). "Preparation of Perfluoronitrosoalkanes. Reaction of Trifluoroacetic Anhydride with Nitrosyl Chloride". Journal of Organic Chemistry 27 (4): 1642. doi:10.1021/jo01051a519.
- ↑ Griffin, C. E.; Haszeldine, R. N. (1960). "279. Perfluoroalkyl derivatives of nitrogen. Part VIII. Trifluoronitrosoethylene and its polymers". Journal of the Chemical Society (Resumed): 1398–1406. doi:10.1039/JR9600001398.
- ↑ Luo, Yu-Ran (2007). Comprehensive Handbook of Chemical Bond Energies. Boca Raton, Fl.: CRC Press. p. 406. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-7366-4.
புற இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் முப்புளோரோநைத்திரசோமெத்தேன் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.