மும்மெத்தில்சிலில் அசைடு

மும்மெத்தில்சிலில் அசைடு (Trimethylsilyl azide) என்பது (CH3)3SiN3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். கரிம வேதியியலில் இது ஒரு வினைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

மும்மெத்தில்சிலில் அசைடு
Skeletal formula of Trimethylsilyl azide
Ball-and-stick model of the trimethylsilyl azide molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசைடோ(மும்மெத்தில்)சிலேன்
இனங்காட்டிகள்
4648-54-8 Y
Beilstein Reference
1903730
ChemSpider 70747 Y
EC number 225-078-5
InChI
  • InChI=1S/C3H9N3Si/c1-7(2,3)6-5-4/h1-3H3 Y
    Key: SEDZOYHHAIAQIW-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C3H9N3Si/c1-7(2,3)6-5-4/h1-3H3
    Key: SEDZOYHHAIAQIW-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 78378
  • [N-]=[N+]=N[Si](C)(C)C
பண்புகள்
C3H9N3Si
வாய்ப்பாட்டு எடை 115.21 g·mol−1
தோற்றம் தெளிவான நீர்மம், நிறமற்றது
அடர்த்தி 0.8763 கி/செ.மீ3 (20 °செ)
உருகுநிலை −95 °C (−139 °F; 178 K)
கொதிநிலை 52 முதல் 53
  175  இல் மி.மீ பாதரசம் (92 முதல் 95 °செ இல் 760 மி.மீ பாதரசம்)
வினைபுரிந்து அபாயகரமான ஐதரசோயிக் அமிலமாக மாறுகிறது.
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 6 °C (43 °F; 279 K)
Autoignition
temperature
> 300 °C (572 °F; 573 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

வணிகரீதியாகவும் மும்மெத்தில்சிலில் அசைடு விற்பனைக்குக் கிடைக்கிறது. மும்மெத்தில்சிலில் குளோரைடுடன் சோடியம் அசைடு சேர்த்து வினைப்படுத்துவதால் இதைத் தயாரிக்கலாம்.:[1]

TMSCl + NaN3 → TMSN3 + NaCl (TMS = (CH3)3Si)

பயன்கள்

தொகு

ஐதரசோயிக் அமிலத்திற்கு மாற்றாக மும்மெத்தில்சிலில் அசைடு பலவினைகளில் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுப்புறத்தில் உள்ள ஈரப்பதத்தில் நீராற்பகுத்தலுக்கு உட்பட்டு ஐதரசோயிக் அமிலமாக மாறிவிடுகிறது என்பதால் மும்மெத்தில்சிலில் அசைடை ஈரம்படாமல் சேமித்து வைக்கவேண்டும்[2]. ஆசெல்தம்வீர் மொத்தத் தொகுப்புவினையில் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

பாதுகாப்பு

தொகு

ஈரப்பதம், வலிமையான ஆக்சிசனேற்றிகள், வலிமையான அமிலங்கள் ஆகியனவற்றுடன் மும்மெத்தில்சிலில் அசைடு ஒவ்வாமைத் தன்மையுடன் காணப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. L. Birkofer and P. Wegner (1988). "Trimethylsilyl azide". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv6p1030. ; Collective Volume, vol. 6, p. 1030
  2. Jafarzadeh, Mohammad (2007). "Trimethylsilyl Azide (TMSN3): A Versatile Reagent in Organic Synthesis". Synlett 2007 (13): 2144. doi:10.1055/s-2007-984895.