மும்மெத்தில் பாசுபேட்டு
மும்மெத்தில் பாசுபேட்டு (Trimethyl phosphate ) என்பது (CH3)3PO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு எசுத்தர் ஆகும். இச்சேர்மம் நிறமற்றதாகவும், எளிதில் ஆவியாகாத ஒரு திரவமாகவும் உள்ளது. பிற சேர்மங்களை உற்பத்தி செய்வதில் சில தனிச்சிறப்புகளை மும்மெத்தில் பாசுபேட்டு பெற்றுள்ளது. [1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பாசுபாரிக் அமில மும்மெத்தில் எசுத்தர்
மு.மெ.பா (TMP) மெத்தில் பாசுபேட்டு மும்மெத்தாக்சிபாசுபீன் ஆக்சைடு மும்மெத்தில் ஆர்த்தோ பாசுபேட்டு | |
இனங்காட்டிகள் | |
512-56-1 | |
ChEBI | CHEBI:46324 |
ChemSpider | 10101 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10541 |
| |
பண்புகள் | |
(CH3)3PO4 | |
வாய்ப்பாட்டு எடை | 140.08 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
உருகுநிலை | −46 °C (−51 °F; 227 K) |
கொதிநிலை | 197 °C (387 °F; 470 K) |
நன்கு கரையும் | |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | தயாரிப்பது தீங்கானது (Xn) |
R-சொற்றொடர்கள் | R22,R36/37/38 |
S-சொற்றொடர்கள் | S36/37,S45 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅமீன் காரத்தின் முன்னிலையில் பாசுபரசு ஆக்சிகுளோரைடை மெத்தனாலுடன் சேர்த்து சூடுபடுத்தினால் மும்மெத்தில் பாசுபேட்டு உருவாகிறது.
POCl3 + 3 CH3OH + 3 R3N → PO(OCH3)3 + 3 R3NH+Cl−
நான்முக வடிவ மூலக்கூறான இச்சேர்மம் ஒரு வலிமையற்ற முனைவுக் கரைப்பானாகும்.
பயன்பாடுகள்
தொகுமிதமான மெத்திலேற்றும் முகவராக மும்மெத்தில் பாசுபேட்டு செயல்படுவதால், அனிலீன்கள் மற்றும் தொடர்புடைய பல்லினவளையச் சேர்மங்களில் இருமெத்திலேற்றம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. [2] பாரம்பரிய முறையான ஈச்சுவெய்லர் – கிளார்க்கு வினையை மூழுமையாக்கும் ஒரு வினையாக இம்முறை கருதப்படுகிறது. பாரம்பரிய முறையில் பார்மால்டிகைடு பக்க வினைகளில் பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது ஆகும். அரோமாட்டிக் ஆலசனேற்றம் மற்றும் நைட்ரோயேற்றம் போன்ற வினைகளில் மும்மெத்தில் பாசுபேட்டு பயன்படுத்தப்படுகிறது. பூச்சிக்கொல்லிகள் மற்றும் மருந்துவகைப் பொருட்கள் தயாரிப்பில் இவ்வினைகலின் தேவை அவசியமானதாகும். பாலி எசுத்தர் போன்ற இழைகள் மற்றும் பலபடிகளில் வண்ணம் ஒடுக்கியாகவும் . மும்மெத்தில் பாசுபேட்டு பயன்படுத்தப்படுகிறது.
பாதுகாப்பு
தொகு2கி/கி.கி உயிர்போக்கும் அளவைக் (எல்டி50) கொண்டிருப்பதால் மும்மெத்தில் பாசுபேட்டு ஒரு குறைவான நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாகக் கருதப்படுகிறது. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ D. E. C. Corbridge "Phosphorus: An Outline of its Chemistry, Biochemistry, and Technology" 5th Edition Elsevier: Amsterdam 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-444-89307-5.
- ↑ William A. Sheppard (1973). "m-Trifluoromethyl-N,N-dimethylaniline". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV5P1085.; Collective Volume, vol. 5, p. 1085
- ↑ J. Svara, N. Weferling, T. Hofmann "Phosphorus Compounds, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2006. எஆசு:10.1002/14356007.a19_545.pub2