மும்மைப் புள்ளி

வெப்பவியக்கவியலில், ஒரு பொருளின் மும்மைப் புள்ளி (Triple point) என்பது அப்பொருளின் மூன்று கட்டங்கள் (வாயு, திரவம், திண்மம்) வெப்பச் சமநிலையில் ஒன்றுசேர்ந்தமையும் வெப்பநிலை, அழுத்தம் ஆகும்.[1] எடுத்துக்காட்டாக, பாதரசத்தின் மும்மைப் புள்ளி −38.8344 °C என்ற வெப்பநிலையிலும் 0.2 MPa அழுத்தத்திலும் ஏற்படும்.

திண்ம, திரவ, வாயு இடையேயான மும்மைப் புள்ளிகளைத் தவிர, பல்லுருவப் பொருட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட திண்ம நிலைகளினைக் கொண்ட மும்மைப் புள்ளிகள் இருக்கலாம். கீலியம்-4 ஒரு சிறப்பு வகையாகும், இது இரண்டு வெவ்வேறு திரவ நிலைகளைக் கொண்ட ஒரு மும்மைப் புள்ளியை தருகிறது. பொதுவாக p சாத்தியமான நிலைகளைக் கொண்ட தொகுதியில் அளவு மும்மைப்புள்ளிகள் உண்டு[1]

நீரின் மும்மைப் புள்ளியானது கெல்வின் எனப்படும் வெப்பவியக்கவியல் வெப்பநிலையின் அடிப்படை SI அலகினை வரையறுப்பதற்கு பயன்படுகிறது.[2]

நீரின் மும்மைப்புள்ளிகள்

தொகு

திண்ம-திரவ-வாயு மும்மைப் புள்ளி

தொகு

ஒரு குறித்த அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் திரவ நீர், திண்ம பனி, நீராவியின் கலவை நிலையான சமநிலையில் ஒன்றுசேர்ந்தமைவது சரியாக 273.16 K (0.01 °C) வெப்பநிலையிலும் 611.73 பாசுக்கல் (ca. 6.1173 மில்லிபார், 0.0060373 atm) பகுதி ஆவியழுத்தத்திலும் ஏற்படுகிறது. அந்த நிலையில், அதன் அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் தன்னிச்சையான சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் முழுவதையும் பனிக்கட்டியாக, நீராக, அல்லது நீராவியாக மாற்றலாம்.

 

மும்மைப் புள்ளிகளின் அட்டவணை

தொகு
பொருட்கள் T [K] p [kPa]*
அசிட்டிலீன் 192.4 &0000000000000120.000000 120
அமோனியா 195.40 &0000000000000006.076000 6.076
ஆர்கன் 83.81 &0000000000000068.900000 68.9
ஆர்சனிக் 1090 &0000000000003628.000000 3628
பியூட்டேன் 134.6 &-1-1-10000000000000.000700 7 × 10−4
கார்பன் (கடுங்கரி) 4765 &0000000000010132.000000 10132
காபனீரொக்சைட்டு 216.55 &0000000000000517.000000 517
கார்பனோராக்சைடு 68.10 &0000000000000015.370000 15.37
குளோரோஃபார்ம் 175.43 &0000000000000000.870000 0.870
தியூட்டிரியம் 18.63 &0000000000000017.100000 17.1
எத்தேன் 89.89 &-1-1-10000000000000.000800 8 × 10−4
எத்தனால் 150 &-1-1-1-1-1-10000000000.000000 4.3 × 10−7
எத்திலீன் 104.0 &0000000000000000.120000 0.12
பார்மிக் அமிலம் 281.40 &0000000000000002.200000 2.2
ஈலியம்-4 (லாம்டா புள்ளி]) 2.19 &0000000000000005.100000 5.1
எக்சாஃபுளோரோயீத்தேன் 173.08 &0000000000000026.600000 26.60
ஐதரசன் 13.84 &0000000000000007.040000 7.04
ஐதரசன் குளோரைடு 158.96 &0000000000000013.900000 13.9
அயோடின் 386.65 &0000000000000012.070000 12.07
ஐசோபியூட்டீன்[3] 113.55 &-1-1-1-1000000000000.000019 1.9481 × 10−5
பாதரசம் 234.2 &-1-1-1-1-1-10000000000.000000 1.65 × 10−7
மெத்தேன் 90.68 &0000000000000011.700000 11.7
நியோன் 24.57 &0000000000000043.200000 43.2
நைட்ரிக் ஆக்சைடு 109.50 &0000000000000021.920000 21.92
நைதரசன் 63.18 &0000000000000012.600000 12.6
நைட்ரசு ஆக்சைடு 182.34 &0000000000000087.850000 87.85
ஆக்சிசன் 54.36 &0000000000000000.152000 0.152
பல்லேடியம் 1825 &-1-100000000000000.003500 3.5 × 10−3
பிளாட்டினம் 2045 &-1-1-10000000000000.000200 2.0 × 10−4
கந்தக டைஆக்சைடு 197.69 &0000000000000001.670000 1.67
டைட்டானியம் 1941 &-1-100000000000000.005300 5.3 × 10−3
யுரேனியம் எக்சாபுளோரைடு 337.17 &0000000000000151.700000 151.7
நீர் 273.16 &0000000000000000.611700 0.6117
செனான் 161.3 &0000000000000081.500000 81.5
நாகம் 692.65 &-1000000000000000.065000 0.065

* கவனிக்கவும்: ஒப்பீட்டுக்காக, பொதுவான வளிமண்டல அமுக்கம்= 101.325 kPa (1 atm).

மேற்கோள்களும் குறிப்புக்களும்

தொகு
  1. 1.0 1.1 தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம் (1994). "Triple point". Compendium of Chemical Terminology Internet edition.
  2. Definition of the kelvin பரணிடப்பட்டது 2012-07-16 at the வந்தவழி இயந்திரம் at BIPM
  3. See Isobutane (data page)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்மைப்_புள்ளி&oldid=3322446" இலிருந்து மீள்விக்கப்பட்டது