முர்ரம் சில்லி அணை

முர்ரம் சில்லி அணை (Murrum Silli Dam) அல்லது பாபு சோட்டேலால் சிறீவசுதவா அணை, மார்தம் சில்லி மற்றும் சீமாட்டி சில்லி என்றும் அழைக்கப்படும் அணையானது மத்திய கிழக்கு இந்தியாவில் உள்ள மகாநதி ஆற்றின் துணை ஆறான சில்லாரி ஆற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது பிரித்தானியப் பேரரசின் ஆளுநர் சீமாட்டி சில்லியின் மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டது. இதனால் இவரது பெயரானது இந்த அணைக்கு முதலில் இடப்பட்டது. இது சத்தீசுகரின் தம்தரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1914 மற்றும் 1923க்கு இடையில் கட்டப்பட்ட இந்த அணை ஆசியாவிலேயே உறிஞ்சு குழல் கசிவுப்பாதைகளைக் கொண்ட முதல் அணையாகும். இந்த அணை ராய்ப்பூரிலிருந்து 95 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இது சத்தீசுகரில் உள்ள மிக முக்கியமான கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்றாகும். இதன் முதன்மை நோக்கம் நீர்ப்பாசனம் ஆகும்.[2]

முர்ரம் சில்லி அணை
Murrum Silli Dam
முர்ரம் சில்லி அணை is located in சத்தீசுகர்
முர்ரம் சில்லி அணை
Location of முர்ரம் சில்லி அணை
Murrum Silli Dam in சத்தீசுகர்
நாடுஇந்தியா
அமைவிடம்தம்தரி மாவட்டம்
புவியியல் ஆள்கூற்று20°32′17″N 81°39′42″E / 20.53806°N 81.66167°E / 20.53806; 81.66167
நிலைசெயல்பாட்டில் உள்ளது
கட்டத் தொடங்கியது1914
திறந்தது1923
அணையும் வழிகாலும்
வகைகட்டுக்கரை, மண் நிரப்பு
தடுக்கப்படும் ஆறுசில்லாரி ஆறு
உயரம்34.15 m (112 அடி)
நீளம்2,591 m (8,501 அடி)
கொள் அளவு1,619,000 m3 (2,117,572 cu yd)
வழிகால் அளவு1,132 m3/s (39,976 cu ft/s)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு165,340,000 m3 (216,256,555 cu yd)
செயலில் உள்ள கொள் அளவு161,913,000 m3 (211,774,209 cu yd)
மேற்பரப்பு பகுதி25 km2 (10 sq mi)[1]

3 சூன் 1929-ல் ஆர். எசு. இராஜேந்திரநாத் சூர் (அரசு குடிமைப் பொறியியலாளர், மத்திய மாகாணம்) முர்ரம் சில்லி அணையின் முன்மாதிரியான பணிகளுக்காக ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம்ஜோர்ஜால் "ராய் சாஹேப்" என்ற பட்டத்தைப் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "National Register for Large Dams" (PDF). India: Central Water Commission. 2009. pp. 194–197. Archived from the original (PDF) on 19 February 2018. பார்க்கப்பட்ட நாள் 30 November 2011.
  2. "District_Dhamtari". Archived from the original on 19 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2 February 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முர்ரம்_சில்லி_அணை&oldid=3781352" இலிருந்து மீள்விக்கப்பட்டது