முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய்

முல்லை பெரியாறு பிரதானக் கால்வாய், மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளின் விவசாய தேவைகளை நிறைவேற்றுவதற்காக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் சிமெண்டால் கட்டப்பட்ட நீர்ப்பாசன கால்வாய் ஆகும். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு பயணமாகும் தண்ணீர் திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி கிராமம் அருகே வைகை ஆற்றில் இருந்து பிரித்து விடப்படுகிறது. இந்த கால்வாய் அதன் பிறகு மதுரை மாவட்ட எல்லைக்குள் நுழைந்து மட்டப்பாறை, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், கள்ளந்திரி ஆகிய ஊர்களை கடந்து மேலூர் வரை செல்கிறது. இடையில் நூற்றுக்கும் மேலான இக்கால்வாய் இடையில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் ஜீவாதாரமாக விளங்குகிறது. இந்த கால்வாய் மூலம் பெறப்படும் நீரால் பெரும்பாலும் நெல் விவசாயமும் அதை தவிர்த்து கரும்பு, வாழை, தென்னை போன்ற விவசாயமும் செய்யப்படுகிறது.

முல்லை பெரியாறு பிரதான கால்வாய் வழியாக ஆடுகளை மேய்க்க கொண்டு செல்லும் கிராமவாசி.


இவற்றையும் பார்க்க

தொகு