முள் தலை விசிறித்தொண்டை ஓணான்
முள் தலை விசிறித்தொண்டை ஓணான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | சீ. பின்னேசெபாலசு
|
இருசொற் பெயரீடு | |
சீதானா பின்னேசெபாலசு தீபக், வியாசு, & கிரி, 2016 |
சீதானா பின்னேசெபாலசு (Sitana spinaecephalus), என்பது முள் தலை விசிறித்தொண்டை ஓணான் எனப் பொதுவாக அறியப்படுகிறது. இது அகாமிடே குடும்ப பல்லி சிற்றினமாகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. [2] இது மேற்கு-மத்திய மாநிலங்களான குசராத்து, இராசத்தான், மகாராட்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காணப்படும் புதர் நிலங்கள் மற்றும் காடுகளில் காணப்படுகிறது.[1]
விளக்கம்
தொகுசீ. பின்னேசெபாலசு நடுத்தர அளவிலான பல்லி ஆகும். ஆண் ஓணானின் நீளம் 48.5 ± 2.9; பெண் ஓணானின் நீளம் 44.8 ± 4.2 ஆகும். இவை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.
மற்ற சீதானா சிற்றினங்களைப் போலவே, இது முதன்மையாகக் கணுக்காலிகளை உணவாகக் கொள்கிறது. இதனைப் பிற உயிரிகள் தொந்தரவு செய்யும் போது, ஆண் ஓணான் எதிரியினை அச்சுறுத்த அலை தாடியினை அசைக்கும். மேலும் இனப்பெருக்கக் காலத்தில் பெண் ஓணானினைத் தொடர்புகொள்ளவும் இதனைப் பயன்படுத்தலாம்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Vyas, R.; Srinivasulu, C.; Mohapatra, P.; Thakur, S. (2021). "Sitana spinaecephalus". IUCN Red List of Threatened Species 2021: e.T127902072A127902074. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T127902072A127902074.en. https://www.iucnredlist.org/species/127902072/127902074. பார்த்த நாள்: 10 June 2024.
- ↑ Sitana spinaecephalus at the Reptarium.cz Reptile Database. Accessed 28 April 2021.
- ↑ "Systematics and phylogeny of Sitana (Reptilia: Agamidae) of Peninsular India, with the description of one new genus and five new species". Contributions to Zoology 85 (1). 2016. https://brill.com/view/journals/ctoz/85/1/article-p67_4.xml. பார்த்த நாள்: 2024-06-10.