முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில்


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அருகே முழையூரில் பழையாறை வடதளி இருக்கும் இடத்திற்கு அருகில் அக்கோயிலுக்கு இணையாக தென்புறம் மேற்கு நோக்கியவண்ணம் உள்ள கற்றளியே பரசுநாத சுவாமி கோயில் ஆகும். இது தென்தளியாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில்
பெயர்
பெயர்:முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:முழையூர்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பரசுநாதர்
தாயார்:ஞானாம்பிகை
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:சோழர் காலக் கட்டுமானக்கோயில்

அமைவிடம்

தொகு

கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் தாராசுரம் சென்று அங்கிருந்து பட்டீச்சரம் சாலையில், சாலை பிரியும் இடத்தில் இடப்புறமாக நேர்ச்சாலையில் சென்றால் முழையூரை அடையலாம். கும்பகோணத்திலிருந்து பேருந்து மூலம் இவ்வூரை அடையலாம்.

அமைப்பு

தொகு

சோழர் காலக் கட்டுமானக்கோயிலாக உள்ள இக்கோயிலில் பல்லவர் கால எச்சங்களாக சண்டிசர் போன்ற சில சிற்பங்கள் உள்ளன.[2]

இறைவன், இறைவி

தொகு

இக்கோயிலில் உறையும் இறைவன் பரசுநாதர், இறைவி ஞானாம்பிகை.

கல்வெட்டு

தொகு

தஞ்சைப் பெரிய கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் பழையாறை தென்தளி எனப்படும் திருக்கோயிலில் பணிபுரிந்த நக்கன் பெற்ற திரு, நக்கன் ஆச்சம், சிறிய நக்கன் ஆச்சி, நக்கன் பட்டி என்ற நான்கு ஆடல் மகளிரைத் தஞ்சை பெரிய கோயிலுக்காக இராஜராஜசோழன் மாற்றம் செய்து நியமித்தான் என்ற குறிப்பு காணப்படுகிறது. மாமன்னன் குறிப்பிடும் பழையாறை தென்தளி என்பது இக்கோயிலே என்பதில் ஐயமில்லை.[2]

புத்தர் சிலை

தொகு

சூன் 1999இல் இக்கோயிலில் ஒரு புத்தர் சிலையின் தலைப் பகுதியைக் காணமுடிந்தது. புன்னகை சிந்தும் முகத்துடன் அந்த புத்தர் சிலையின் ஒரு காது உடைந்த நிலையில் உள்ளது. சுருள்முடியுடனும், தலையில் தீச்சுடருடனும் அச்சிலை இருந்தது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. 2.0 2.1 குடவாயில் பாலசுப்பிரமணியன், பழையாறை மாநகர், பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999
  3. Buddha statues in the vicinity of other temples in the Chola country, Tamil Civilization, Vol.19, September 2008, Tamil University, Thanjavur,Tamil Nadu, India.

வெளியிணைப்புகள்

தொகு