மூன்றாம் கெங்கர்ஜி

மகாராஜாதிராஜ் மிர்சா மகாராவ் சர் மூன்றாம் கெங்கர்ஜி சவாய் பகதூர் (Khengarji III) (23 ஆகஸ்ட் 1866-15 ஜனவரி 1942) ஒரு முற்போக்கான மற்றும் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவராவார். 1875 முதல் 1942 வரை கட்ச் இராச்சியத்தை மிக நீண்ட காலம் ஆண்டார்.[1][2]

வாழ்க்கை

தொகு
 
இலண்டனில் ஆல்பிரட் எஸ்ராவுடன், பதக்கங்களுடன் காணப்படும் மூன்றாம் கெங்கர்ஜி, பொ. ஊ 1937

1875 டிசம்பர் 19 அன்று தனது தந்தை இரண்டாம் மகாராவ் பிரக்மால்ஜி இறந்த பிறகு 1875 ஆம் ஆண்டில் இவர் அரியணை ஏறினார். 1884 ஆகஸ்ட் 11 ஆம் தேதி உரிய வயது வரும் வரை ஆட்சி மன்றக் குழுவின் கீழ் ஆட்சி செய்தார். 1884 நவம்பர் 14 அன்று முழு அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்டார். 1892இல் 17 துப்பாக்கிகளுடன் வணக்கமுறை வழங்கப்பட்டது. இவர் அஞ்சாரைச் சேர்ந்த சேத் ரன்மல்ஷா அஸ்கரன் சிசோடியாவை கட்ச் மாநிலத்தின் திவானாக நியமித்தார்.

இராஜ்புத்துகளின் ஜடேஜா குலம் அதன் உச்சத்தில் இருந்தபோது, இவர் தனது ஆட்சியின் அறுபத்தாறு ஆண்டுகளில் தனது மாநிலத்தை முன்னேற்றி, அதை நவீனப்படுத்தினார். விக்டோரியா மகாராணி ஆட்சியின் பிற்பகுதியில், அவரது உதவியாளராக நியமிக்கப்பட்டார். இது இந்திய அரசாங்கத்தின் சில அதிகாரிகளிடையே பொறாமையைத் தூண்டியது. இவர் அடிக்கடி ஐரோப்பாவுக்குச் சென்று அங்குள்ள ஆளும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். 1877, 1903 மற்றும் 1911 ஆம் ஆண்டுகளில் மூன்று தில்லி தர்பார்களிலும் கலந்து கொண்ட மிகச் சில இந்திய மன்னர்களில் மூன்றாம் கெங்கர்ஜியும் ஒருவர். இவர் 1885 மார்ச் 2 அன்று சவாய் பகதூர் என்ற பரம்பரை பட்டங்களுக்கும், 1918 ஜனவரி 1 அன்று ஆங்கிலேயர்களால் மகாரோவ் என்ற பட்டங்களுக்கும் உயர்த்தப்பட்டார். 1919 ஆம் ஆண்டில், இவருக்கு 19 துப்பாக்கிகளின் வணக்கமுறை வழங்கப்பட்டது. மேலும் 1921 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் நடந்த உலக நாடுகள் சங்க மாநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1921 இல் இலண்டனில் நடந்த பிரித்தானிய இராச்சிய சங்கத்தின் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.[3] 1921 ஆம் ஆண்டில், அந்த அமைப்பின் துணைத் தலைவராகவும் இருந்தார். 1921 ஆம் ஆண்டில் இலண்டன் மற்றும் பாத் நகரங்களின் மதிப்புமிக்க உறுப்பினர் என்ற கௌரவம் வழங்கப்பட்டது. சர் கெங்கர்ஜி 1942 இல் தனது 75 வயதில் இறந்தார். அவருக்குப் பிறகு இவரது மகன் விஜயராஜி ஆட்சிக்கு வந்தார்.[4]

இவரது ஆட்சியின் சிறப்பம்சங்கள்

  1. Giving finishing touches to Prag Mahal in 1878–79, which was commissioned by his father Maharao Pragmalji in 1865–66.
  2. The Fergusson Museum, now known as the Kutch Museum, was founded by him in 1877 AD to house the numerous wedding gifts he received. It is the oldest museum in Gujarat.[5]
  3. He was a keen sportsman and naturalist. He was one of the early Indian members of the Bombay Natural History Society.[6] and was a fellow of the Zoological Society of London from 1932.
  4. Promotion of Cutch State Railway, a narrow gauge line owned & managed by Princely State of Cutch. The laying of railway tracks between Tuna Port and Anjar started in 1900–01. Ostensibly the inaugural train carried the baraat (marriage entourage) of Yuvraj Vijayrajji. First train ran in year 1905. The line was extended to Bhuj from Anjar in 1908 and later to Bhimasar, Bhachau & Kandla.
  5. Ordered renovation of Suralbhit Jadeshwar Temple near Bhuj in 1914. Renovation work done by Mistris of Madhapar.
  6. Construction of Vijay Vilas Palace for his son & Yuvraj Vijayaraji at Mandvi in 1920 completed in 1929.
  7. Construction of Cutch Castle near Opera House at Bombay during decade of 1920 at behest & under supervision of Rai Bahadur Jagmal Raja Chauhan of Nagor.
  8. Sanctioned the Haji Pir (near Nara) Dargah complex in the Rann.
  9. Introduced Kutch into the electricity, automobile and aviation era, but preferred to keep his personal apartment at the Pragmahal Palace non-electrified.
  10. In 1930, he personally identified & selected the location for new port of Kandla. The Cutch State Railway lines were extended from Anjar to Kandla.[7][8]
  11. Opening up of various state funded Schools & educational institutions, like Sanskrit Pathshala, Alfred High School, Library in Princely State of Kutch.
  12. Built public Hospitals at Bhuj and Mandvi.
  13. Commissioned in 1940 Darya Mahal, his monumental residence at Napsean Sea Road in Mumbai.[9][10]
  14. Construction of Khengar Sagar dam at Chhasra over River Bhukhi in 1937
  15. Throughout 66 years of his reign kept inflation in tight check.
  16. Interacted with Indian stalwarts, Swami Vivekanand, Mahatma Gandhi, Dadabhai Naoroji.
  17. Rare occurrence – saw five generation of Maharaos from Pragmalji II to Pragmalji III.
  18. Acknowledged as one of the finest rifle shots of his times. He purchased a 500/465 double rifle number 30379 from Holland and Holland in London in 1926. The rifle is now owned by William Battershill.
  19. Keen judge of horses.

நினைவுச்சின்னங்கள்

தொகு
  1. சுதந்திரத்திற்குப் பிறகும் அவரது நினைவை நிலைநிறுத்தும் வகையில் புஜில் கெங்கர் பூங்கா நிறுவப்பட்டது.
  2. தற்போதைய மூன்றாம் மகாராவ் பிரக்முல்ஜி 1930 ஆம் ஆண்டில் அவர் நிறுவிய துறைமுகமான கண்ட்லா புதிய கண்ட்லாவின் துறைமுக அறக்கட்டளையின் பிரதான அலுவலகத்தில் தனது மார்பளவு சிலையை வைக்க முக்கிய பங்கு வகித்தார்.
  3. அஞ்சர்-ஆதிபூர் சாலையில் உள்ள ஒரு சதுக்கத்திற்கு அவரது நினைவாக மகாராவ் கெங்கர்ஜி சௌக் என்று பெயரிடப்பட்டுள்ளது, அங்கு அவரது மார்பளவு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
  4. முந்த்ரா அருகே உள்ள கெங்கர் சாகர் அணை அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.[11]
 
மகாராவ் மூன்றாம் கெங்கர்ஜியின் ஓவியம்
 
புலி வேட்டையில் மூன்றாம் கெங்கர்ஜி

மேற்கோள்கள்

தொகு
  1. Kutch பரணிடப்பட்டது 5 சூன் 2011 at the வந்தவழி இயந்திரம்
  2. Jadeja rulers of Kutch பரணிடப்பட்டது 13 சூன் 2011 at the வந்தவழி இயந்திரம்
  3. https://www.nottingham.ac.uk/research/groups/conferencing-the-international/documents/india-office-guides/rtc2-biographical-notes.pdf [bare URL PDF]
  4. [1] The Vedanta kesari, Volume 80.
  5. Bhuj பரணிடப்பட்டது 5 செப்டெம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
  6. Khachar, Lavkumar (2008). "Obituary. Himmatsinhji October 9, 1928, to February 22, 2008". J. Bombay Nat. Hist. Soc. 105 (1): 86. https://www.biodiversitylibrary.org/page/48368055. 
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; n என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; r என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. The 1930s was a period when members of the former princely states were building homes in Mumbai. It was only natural that they chose the prevalent style of the time. Darya Mahal, the home of the Maharao of Kutch, the Wankaner House of the erstwhile Wankaner state, and Dhanraj Mahal of the Maharaja of Dhanrajgir are a few examples of this style[தொடர்பிழந்த இணைப்பு]
  10. Dariya Mahal. The palace belonged to the Maharao of Kutch. A family of Marwari industrialists bought the palace and its grounds; they chopped down the trees on the land, cleared the antiques out of the palace.. பரணிடப்பட்டது 24 திசம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
  11. . 27 September 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_கெங்கர்ஜி&oldid=4017363" இலிருந்து மீள்விக்கப்பட்டது