மூலக்கூறு இயற்பியல்

மூலக்கூறு இயற்பியல் (Molecular physics) என்பது மூலக்கூறுகளின் இயற்பியல் பண்புகளைப் பற்றி ஆராய்கின்ற ஒரு துறையாகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் வேதிப்பிணைப்புகளால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு மின்சுமை ஏதுமின்றி நடுநிலையுடன் காணப்படும் ஒரு குழுவே மூலக்கூறு எனப்படும்[1]. இத்தகைய மூலக்கூறுகள் மற்றும் அணுக்களுக்கு இடையில் உள்ள வேதிப்பிணைப்புகள் மற்றும் அத்துடன் மூலக்கூறு இயக்கவியல் பற்றியும் இத்துறை ஆய்வு செய்கிறது. பல்வகையான நிறமாலையியல் சோதனைகள் மற்றும் ஒளி , ஓலிச் சிதறல் சோதனைகளில் இத்துறையின் மிக முக்கியமான சோதனை தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. மேலும் அணு இயற்பியலுடன் மிகநெருங்கிய தொடர்பும் கோட்பாட்டு வேதியியல், பெளதிக வேதியியல், வேதி இயற்பியல் ஆகிய துறைகளுடன் மேற்பொருந்தியும் காணப்படுகிறது.

அணுக்கள், மூலக்கூறுகளின் கிளர்வு நிலைகளுடன் கூடுதலாக அவற்றின் சுழற்சி மற்றும் அதிர்வுகள் தொடர்பான அறிதலையும் இத்துறை மேற்கொள்கிறது. இந்த சுழற்சிகளும் அதிர்வுகளும் தனி ஆற்றல் நிலைகளாக உள்ளன என்று அளவிடப்பட்டு இருக்கிறது. வேறுபட்ட சுழற்சி நிலைகளுக்கு இடையே உள்ள சிறிய ஆற்றல் வேறுபாடு காரணமாக தூய சுழற்சி நிறமாலையானது மின்காந்த நிழற்பட்டையின் மீஅகச்சிவப்புப் பகுதியில் ( 30 முதல் 150 மைக்ரோமீட்டர் அலைநீளத்தில் ) காணப்படுகிறது. அகச்சிவப்புப் பகுதியின் ( 1 முதல் 5 மைக்ரோமீட்டர் ) பகுதியில் அதிர்வு அலைமாலையும் தெரிகின்றன. மின்னணு நிலைமாற்றத்தின் காரணமாகத் தோன்றும் அலைமாலைகள் பெரும்பாலும் கட்புலனாகும் பகுதியிலும் புறஊதா நிறப்பகுதியிலும் காணப்படுகின்றன. மூலக்கூறுகளின் சுழற்சி மற்றும் அதிர்வு அலைமாலைகளை அளவிடுவதன் மூலம் உட்கருக்களுக்கு இடையிலான தொலைவை கணக்கிட முடியும்.

அணு இயற்பியல் துறையின் அத்தியாவசியமான அணுவொழுக்கல் கோட்பாடு , மூலக்கூறுவொழுக்கல் கோட்பாடாக விரிவடைந்துள்ளது என்பதே மூலக்கூறு இயற்பியல் துறையின் ஒரு முக்கியமான அம்சமாகும்.

மேற்கோள்கள்

தொகு

இவற்றையும் காண்க

தொகு

வார்ப்புரு:Physics-footer

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலக்கூறு_இயற்பியல்&oldid=2746919" இலிருந்து மீள்விக்கப்பட்டது