மூவெத்தில் பாசுபைட்டு
மூவெத்தில் பாசுபைட்டு (Triethyl phosphite) என்பது P(OCH2CH3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பெரும்பாலும் P(OEt)3 என்ற சுருக்க வாய்ப்பாட்டால் மூவெத்தில் பாசுபைட்டை அடையாளப்படுத்துவர். நிறமற்ற, மணமற்ற நீர்மமாகக் காணப்படும் இது கரிமவுலோக வேதியியலில் ஓர் ஈந்தணைவியாகவும், கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு வினையாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மூவெத்தில் பாசுபைட்டு | |
வேறு பெயர்கள்
மூவிதாக்சிபாசுபீன்
| |
இனங்காட்டிகள் | |
122-52-1 | |
ChemSpider | 28956 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 31215 |
| |
UNII | 6B2R04S55G |
பண்புகள் | |
C6H15O3P | |
வாய்ப்பாட்டு எடை | 166.16 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.969 கி/மி;லி |
உருகுநிலை | −70 °C (−94 °F; 203 K) |
கொதிநிலை | 156 °C (313 °F; 429 K) (57 to 58 °செல்சியசு (16 மி.மீபாதரசம் அழுத்தம்) |
கரிம கரைப்பான்கள் | |
-104.8·10−6 செ.மீ3/மோல் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இம்மூலக்கூறு மூன்று ஈத்தாக்சைடு குழுக்களுடன் பிணைக்கப்பட்ட ஒரு பட்டைக்கூம்பு பாசுபரசு(III) மையத்தைக் கொண்டுள்ளது. பாசுபாரிக் அமிலத் தரநிலைக்கு எதிராக இதன் 31பி அணுக்கரு காந்த ஒத்ததிர்வு நிறமாலை சுமார் மில்லியனுக்கு +139 பகுதிகள் என்ற சமிக்ஞையைக் கொண்டுள்ளது.
ஒரு காரத்தின் முன்னிலையில் குறிப்பாக ஒரு மூவிணைய அமீன் முன்னிலையில் பாசுபரசு முக்குளோரைடையும் எத்தனாலையும் சேர்த்து சூடுபடுத்தினால் மூவெத்தில் பாசுபைட்டு உருவாகிறது.[1]
- PCl3 + 3 EtOH + 3 R3N → P(OEt)3 + 3 R3NH + Cl−
காரத்தைப் பயன்படுத்தாவிடில் இவ்வினையில் ஈரெத்தில் பாசுபைட்டு ((EtO)2P(O)H) உருவாகும். மூவெத்தில் பாசுபைட்டுடன் தொடர்புடைய பல சேர்மங்கள் இதே முறையில் தயாரிக்கப்படுகின்றன. மூவைசோபுரோப்பைல் பாசுபைட்டு ஓர் உதாரணமாகும்.
ஓர் ஈந்தணைவியாக
தொகுஒருங்கிணைப்பு வேதியியல் மற்றும் ஒருபடித்தான வினையூக்க வினைகளில் மூவெத்தில் பாசுபைட்டு ஒரு மென்மையான ஈந்தணைவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அணைவுகள் பொதுவாக கொழுப்பு நாட்ட்டம் கொண்டும் குறைந்த ஆக்சிஜனேற்ற நிலை உலோகங்களையும் கொண்டிருக்கும். நிறமற்ற அணைவுகளான FeH2(P(OEt)3)4 மற்றும் Ni(P(OEt)3)4 போன்றவை எடுத்துக்காட்டுகளாகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ford-Moore, A. H.; Perry, B. J. (1951). "Triethyl Phosphite". Org. Synth. 31: 111. doi:10.15227/orgsyn.031.0111.
- ↑ Ittel, Steven D. (1990). "Complexes of Nickel(0)". Inorganic Syntheses 28: 98–104. doi:10.1002/9780470132593.ch26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-13259-3.