மூ. சி. சீனித்தம்பி


எம். எஸ்.எஸ் என அழைக்கப்படும் மூ.சி. சீனித்தம்பி ஓய்வுபெற்ற அதிபர் ஆவார்.[[1]][எவ்வாறு?] வதிரியில் 18 பெப்ரவரி 1920 இல் பிறந்தவர். ஆசிரியராக அதிபராக சமாதான நீதவானாக கூட்டுறவாளராக சமூகசேவையாளராக அறியப்பட்டவர். ஆங்கிலம் இலத்தீன் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் புலமையுடையவர். தேவரையாளி இந்துக் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றியவர்.[[2]]

மூ.சி.சீனித்தம்பி (M.S.SEENITHAMBY).jpg

கல்விதொகு

தேவரையாளி சைவ வித்தியாசாலை, காலி சென்ற் அலோசியஸ் கல்லூரி, கொழும்பு ஆனந்தாக் கல்லூரி மற்றும் 1953 இல் இந்தியாவில் இராசதானிக் கல்லூரியிலும் (Presidency College) கற்றார்.

இலண்டன் மெட்றிக்குலேசன் பரீட்சையில் 1942 இல் சித்தியடைந்தார்

தொழில்தொகு

ஆசிரியப்பணி : 1949-1953 வரை மாத்தளை சென் தோமஸ்கல்லூரி.

அதிபர்பணி : 1954 - 1979இல் வரை அதிபர் பணி தேவரையாளி இந்துக் கல்லூரி.[3]

சமூகப் பணிகள்தொகு

07.05.1957 இல் தேவரையாளி இந்துக் கல்லூரியை உயர்தர ஆங்கிலப் பாடசாலையாக தரமுயர்த்தப் பாடுபட்டார்.[4] பரணிடப்பட்டது 2019-03-19 at the வந்தவழி இயந்திரம்

1981 இல் வதிரி அபிவிருத்தி நிலையத்தின் தாபகத் தலைவர்.

சுற்று வாசிப்பு, இலக்கிய மன்றம், வீதியோட்டம் ஆகியவற்றை மாணவர்களிடையே ஊக்குவித்து வளர்த்தெடுத்தார்.

1966 இல் வல்லை கூட்டுறவு வைத்தியசங்கத்தின் அங்கத்தவர்.

1969-1975 வரை இந்து கலாசார அமைச்சின் ஆலோசகர்.

1975 இல் கட்டைவேலி  நெல்லியடி ப.நோ.கூ.சங்கத்தின் தலைவர்.

.

வெளியீடுகள்தொகு

1.   ஆய்வுக்கட்டுரை : “Regional and Cultural Traditions in the Development of Human Rights in Sri Lanka.”1980, Human Rights Centre, Sri Lanka Foundation Institute.

2.   ஆய்வுக்கட்டுரை : “National Local and Regional Arrengements for the Promotion and Protection of Human Rights in the Asion Region”  united Nations Regional Seminar, 1982.

பெற்ற கௌரவம்தொகு

கல்விச் சேவைக்காகவும் சமூகசேவைக்காகவும் MAN OF ACHIEVEMENT AWARD 1988 ஆம் ஆண்டு CAMBRIDGE INTERNATIONAL BIOGRAPHICAL INSTITUTE வழங்கிக் கௌரவித்தது.[சான்று தேவை]

வெளியிணைப்புதொகு

[5] நினைவுப் பேருரை

[6] வதிரி அபிவிருத்தி நிறுவன தாபகர்

[7] தேவரையாளி இந்து

http://www.sundaytimes.lk/031019/plus/appreciation.htmHis selfless service will be remembered

[8] பொ. கனகசபாபதியின் "எம்மை வாழ வைத்தவர்கள்" நூலில் மூ.சி.சீனித்தம்பி


"https://ta.wikipedia.org/w/index.php?title=மூ._சி._சீனித்தம்பி&oldid=3225491" இருந்து மீள்விக்கப்பட்டது