மெகுலி கோஷ்

மெகுலி கோஷ் (Mehuli Ghosh) (பிறப்பு:20 நவம்பர் 2000) ஓர் இந்திய துப்பாக்கி சுடுதல் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் தனது 16 வயதில், 2016 தேசிய துப்பாக்கி சுடுதல் வாகைப்போட்டியில், ஒன்பது பதக்கங்களை வென்றார். இவர் 2017 ஆம் ஆண்டு, ஜப்பானில் நடந்த ஆசிய 'ஏர்கன்'(Airgun) வாகைப்போட்டியில், தனது முதல் பன்னாட்டுத் தங்கப் பதக்கத்தை வென்றார்.[1] மேற்கு வங்கத்தில் பிறந்து வளர்ந்த கோஷ், இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணியின் இளைய உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.

மெகுலி கோஷ் মেহুলি ঘোষ
2018 கோடை இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டில் பெற்ற வெள்ளி பதக்கம் (10 மீட்டர் air rifle)
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
குடியுரிமைஇந்தியன்
பிறப்பு20 நவம்பர் 2000 (2000-11-20) (அகவை 23)
கல்யாணி, நாடியா, மேற்கு வங்கம்
வசிப்பிடம்Baidyabati, ஹூக்லி மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா
கல்விTechno India Group Public School, கூக்ளி-சூச்சுரா
தொழில்துப்பாக்கி சுடுதல்
ஆண்டுகள் செயலில்2014–
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுகுறி பார்த்துச் சுடுதல்
நிகழ்வு(கள்)Air rifle
சாதனைகளும் விருதுகளும்
உலக இறுதிFinished at 7 position at the junior shooting competition at செக் குடியரசு in May 2017.In 2018 ISSF world cup she won 2 Bronze medal.
தேசிய இறுதி2016-2 Gold; 7 Silver .2017– 8 Gold, 3 Bronze
பதக்கத் தகவல்கள்
Women's shooting
நாடு  இந்தியா
ISSF World Shooting Championships
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 ISSF World Shooting Championships 10 m team air rifle
இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 Youth Olympic Games Shooting at the 2018 Summer Youth Olympics – Girls' 10 metre air rifle
பொதுநலவாய விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 பொதுநலவாய விளையாட்டுக்கள் Shooting at the 2018 Commonwealth Games – Women's 10 metre air rifle
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2019 Shooting at the 2019 South Asian Games
இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள், 2018, தங்கப்பதக்கத்திற்கான இறுதிச்சுற்று..

வாழ்க்கைப் பின்னணி தொகு

தொடக்கக் காலங்களில், சிஐடி(CID) போன்ற, புகழ் பெற்ற தொலைக்காட்சி தொடர்களாலும், பல்வேறு அதிரடி திரைப்படங்களைப் பார்த்தும், இவர் துப்பாக்கிகள் மீது ஈர்க்கப்பட்டார்.  2008 ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவின் விளையாட்டை, பார்த்தபின் துப்பாக்கிச் சுடுதலைத் தொழிலாக தொடர முடிவு செய்தார்.  அவரது  தொடக்ககாலத்தில், ​​பயிற்சி செய்வதற்கான சரியான வரம்பும் மின்னணு இலக்குகளும் இல்லாமல் போனது.  வரம்புகளில் தனது இலக்குகளை மாற்ற அவர் ஒரு கை கம்பியை மட்டுமே பயன்படுத்தினார்.

கோஷ் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்.  அவரது தந்தை தினசரி கூலி தொழிலாளி. அவரது தாயார் ஒரு இல்லத்தரசி.  ஆரம்ப காலத்தில், அவரின் பயிற்சிக்காக அந்த குடும்பத்தினர் பெரும் நிதி சிக்கல்களை எதிர்கொண்டனர், ஆனால், பிற்காலத்தில் இவரால், பிறருக்கு ஆதரவளிக்க முடிந்தது.[2]

2014 ஆம் ஆண்டில், தற்செயலாக அவரது குண்டு ஒரு நபரைத் தாக்கி காயப்படுத்திய போது, கோஷின் ஆட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது.  இதனால் அதிர்ச்சியடைந்த இவர் மன அழுத்தத்திற்கு ஆளானார்.  அதனைத் தொடர்ந்து, இவரது பெற்றோர், இவரை அர்ஜுனா விருது பெற்ற ஜாய்தீப் கர்மக்கரின் பயிற்சிக் கூடத்திற்கு அழைத்துச் சென்றனர்.[3] இதன் காரணமாக, அவர் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருந்ததுடன் பெரும்பாலும் நள்ளிரவிலேயே தனது பயிற்சி அமர்வுகளிலிருந்து திரும்புவார்.

வெற்றிகள் தொகு

2016 ஆம் ஆண்டின் தேசிய சாம்பியன்ஷிப் கோஷுக்கு ஒரு முக்கிய மைல் கல்லாக இருந்தது.  அந்த போட்டியில், ஒன்பது பதக்கங்களை வென்று ஜூனியர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.  2017 ஆம் ஆண்டில், ஜப்பானில் நடந்த ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்பில் அவர் தனது முதல் சர்வதேச தங்கத்தை வென்றார்.  2018 ஆம் ஆண்டில், பியூனஸ் அயர்ஸில் நடந்த யூத் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.  அவர் காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும்,[4] அந்த ஆண்டு உலகக் கோப்பையில் வெண்கலத்தையும் வென்றார். இது சீனியர் உலகக் கோப்பையில் கோஷின் அறிமுகமாகும். மேலும், பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் வெண்கலம் வெல்ல உலக ஜூனியர் சாதனைப் புரிந்தார். 2019 ஆம் ஆண்டில், நேபாளத்தில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், இவர் தற்போதைய உலக சாதனையை முறியடித்துத் தங்கம் வென்றார்.[5] கோஷ் 2020 ஆம் ஆண்டில், 'ஸ்போர்ட்ஸ்-ஸ்டார் ஏசஸ்' விருதுகளில், அந்த "ஆண்டின் சிறந்த இளம் தடகள வீராங்கனை" விருதைப் பெற்றார்.[6][7]

  • வெள்ளிப் பதக்கம்: 2019 ஐ.எஸ்.எஸ்.எஃப் ஜூனியர் உலகக் கோப்பை சுஹ்ல்
  • தங்கப்பதக்கம்: 2019 தெற்காசிய விளையாட்டுகள் காத்மாண்டு
  • வெண்கல பதக்கம்: 2019 ஆசிய சாம்பியன்ஷிப் (ஜூனியர்) டாயுவான்
  • வெள்ளிப் பதக்கம்: 2018 ஒலிம்பிக் விளையாட்டு (யூத்) புவெனஸ் அயர்ஸ்
  • வெண்கல பதக்கம்: 2018 ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை குவாடலஜாரா
  • வெள்ளிப் பதக்கம்: 2018 காமன்வெல்த் விளையாட்டு கோல்ட் கோஸ்ட்
  • வெண்கல பதக்கம்: 2018 உலகக் கோப்பை குவாடலஜாரா
  • தங்கப் பதக்கம்: 2017 ஆசிய சாம்பியன்ஷிப் (யூத்) வகோ நகரம்
  • 2 தங்கப் பதக்கங்கள், 7 வெள்ளிப் பதக்கங்கள்: 2016 தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் புனே
  • 10 மீ ஏர் ரைபிள் கலப்பு குழு

மேற்கோள்கள் தொகு

  1. "ISSF - International Shooting Sport Federation - issf-sports.org". www.issf-sports.org. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
  2. "பிபிசி தமிழ்".
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. "Commonwealth Games 2018: Mehuli Ghosh wins silver in 10 air rifle, Apurvi Chandela bags bronze". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
  5. "South Asian Games 2019: Mehuli Ghosh wins gold in 10m air rifle with world record score of 253.3, effort to not be recognised by ISSF - Sports News , Firstpost". Firstpost. 2019-12-03. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
  6. Sportstar, Team. "Mehuli Ghosh wins Sportstar Aces 2020 Young Athlete of the Year (Female)". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
  7. Dey, Santadeep. "Shooting star, counting medals - the Mehuli Ghosh story". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகுலி_கோஷ்&oldid=3358864" இலிருந்து மீள்விக்கப்பட்டது