மெங்கிஸ்து ஹைலி மரியாம்

மெங்கிஸ்து ஹைலி மரியாம் (Mengistu Haile Mariam, பிறப்பு: 1937[1]) எத்தியோப்பியா வின் தலைவராக 1977 முதல் 1991 வரையில் ஆட்சியில் இருந்தவர். 1977 முதல் 1987 வரையில் அப்போதைய இராணுவ ஆட்சியில் மிகவும் பலம் வாய்ந்த இராணுவத் தலைவராகவும் இருந்தார். 1977-1978 காலப்பகுதியில் நாட்டில் எழுந்த மக்கள் எழுச்சியை இராணுவத்தின் உதவியுடன் முறியடித்தார். பல்லாயிரக்கணக்கானோர் இந்நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்[2]. பனிப்போர் முடிவில் 1991 இல் அரசுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து மெங்கிஸ்து சிம்பாப்வேக்குத் தப்பி ஓடினார். எத்தியோப்பிய நீதிமன்றம் அவரில்லாமலேயே நீதி விசாரணை நடத்தி மெங்கிஸ்துவுக்கு ஆயுள் சிறைத்தண்டனையை விதித்தது[3].

மெங்கிஸ்து ஹைலி மரியாம்
Mengistu Haile Mariam
எத்தியோப்பியாவின் அரசுத் தலைவர்
பதவியில்
பெப்ரவரி 3, 1977 – செப்டம்பர் 10, 1987
முன்னையவர்டஃபாரி பென்டி
பின்னவர்அவரே, எத்தியோப்பிய மக்கள் சனநாயகக் குடியரசின் தலைவராக
எத்தியோப்பியாவின் 1வது அதிபர்
பதவியில்
செப்டம்பர் 10 1987 – மே 21 1991
பின்னவர்டெஸ்பாயே கிடான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1937[1]
அரசியல் கட்சிஎத்தியோப்பிய தொழிலாளர் கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Profile: Mengistu Haile Mariam" (in English). BBC News Online. December 12, 2006. http://news.bbc.co.uk/1/hi/world/africa/6171927.stm. பார்த்த நாள்: 2006-12-13. . Other accounts state May 21 1941[1] பரணிடப்பட்டது 2006-06-23 at the வந்தவழி இயந்திரம், May 27, 1941
  2. BBC, "Mengistu found guilty of genocide," 12 December 2006.
  3. "Profile: Mengistu Haile Mariam" (in English). BBC News Online. December 12, 2006. http://news.bbc.co.uk/2/hi/africa/6251095.stm. பார்த்த நாள்: 2007-01-11. .

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெங்கிஸ்து_ஹைலி_மரியாம்&oldid=3792644" இலிருந்து மீள்விக்கப்பட்டது