மெத்தில் அசைடு

மெத்தில் அசைடு (Methyl azide) என்பது CH3N3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சகப்பிணைப்பு மூலக்கூறான இச்சேர்மம் ஐதரசோயிக் அமிலம் மற்றும் பிற ஆல்கைல் அசைடுகளுடன் தொடர்புடையது ஆகும்.

மெத்தில் அசைடு
Skeletal formula of methyl azide
Ball-and-stick model of the methyl azide molecule
Space-filling model of the methyl azide molecule
பெயர்கள்
வேறு பெயர்கள்
அசைடோமீத்தேன்
இனங்காட்டிகள்
624-90-8 Y
ChemSpider 71411 Y
InChI
  • InChI=1S/CH3N3/c1-3-4-2/h1H3 Y
    Key: PBTHJVDBCFJQGG-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 79079
  • [N-]=[N+]=N\C
பண்புகள்
CH3N3
வாய்ப்பாட்டு எடை 57.05
தோற்றம் வெண்மையான தூள்
சிறிதளவு கரையும்
கரைதிறன் ஆல்கேன், ஈதர்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அதிக வெடிக்கும் தன்மை
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் ஐதரசோயிக் அமிலம், குளோரின் அசைடு, எத்தில் அசைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

சோடியம் அசைடை மெத்திலேற்றம் செய்து மெத்தில் அசைடு தயாரிக்கப்படுகிறது. முதன்முதலில் 1905[1] ஆம் ஆண்டில் தொகுப்பு முறையில் இது தயாரிக்கப்பட்டது. இச்சேர்மம் முதல்நிலை வினைவகையில் சிதைவடைகிறது.:[2]

CH3N3 → CH3N + N2

அண்டம் சார்ந்த அண்டக்கதிர்கள் மற்றும் ஒளியன்கள் மூலம், விண்மீனிடை பனிப்படலத்தில் சமநிலையற்ற தொகுப்பு வினைகள் நிகழ மெத்தில் அசைடு முன்னோடியாக இருந்திருக்கலாம். இவ்வினைகள் வழியாகவே வாழ்வுக்கு முன்னான மூலக்கூறுகள் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[3]

பாதுகாப்பு

தொகு

சுற்றுப்புற வெப்பநிலையில் மெத்தில் அசைடு நிலைப்புத் தன்மையுடன் இயல்பாக உள்ளது ஆனால் வெப்பப்படுத்தும் போது இது வெடிக்கும் இயல்புடையது.[4] பாதரசம் இதனுடன் இணைந்திருக்க நேரிட்டால் சிறு அதிர்ச்சி மற்றும் தீப்பொறிக்கு உணர்திறன் அதிகரித்து வெடித்துவிடும் அபாயம் அதிகரிக்கிறது. ( இருமெத்தில் மலோனேட்டு + சோடியம் மெத்திலேட்டு), பாதரசம், மெத்தனால், சோடியம் அசைடு, இருமெத்தில் சல்பேட்டு, சோடியம் ஐதராக்சைடு, ஐதரசன் அசைடு ஆகியனவற்றுடன் ஒவ்வாத்தன்மையைக் கொண்டிருக்கிறது. சிதைவடைவதற்காக சூடுபடுத்தும் போது NOx நச்சுப் புகையாக சிதைகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Dimroth, O.; Wislicenus, W. (1905). "Ueber das Methylazid". Berichte der Deutschen Chemischen Gesellschaft 38 (2): 1573–1576. doi:10.1002/cber.19050380254. 
  2. O'Dell, M. S.; Darwent, B. (1970). "Thermal decomposition of methyl azide". Canadian Journal of Chemistry 48 (7): 1140–1147. doi:10.1139/v70-187. 
  3. Quinto-Hernandez, A.; Wodtke, A. M.; Bennett, C. J.; Kim, Y. S.; Kaiser, R. I. (2011). "On the Interaction of Methyl Azide (CH3N3) Ices with Ionizing Radiation: Formation of Methanimine (CH2NH), Hydrogen Cyanide (HCN), and Hydrogen Isocyanide (HNC)". The Journal of Physical Chemistry A 115 (3): 250–264. doi:10.1021/jp103028v. பப்மெட்:21162584. 
  4. Urben, P. G., ed. (2006). Bretherick's Handbook of Reactive Chemical Hazards (7th ed.). Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123725639.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தில்_அசைடு&oldid=1922211" இலிருந்து மீள்விக்கப்பட்டது