மெத்தில் இரேனியம் மூவாக்சைடு

மெத்தில் இரேனியம் மூவாக்சைடு (Methylrhenium trioxide) என்பது CH3ReO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம உலோகச் சேர்மமாகும். மெத்தில் இரேனியம் டிரையாக்சைடு, மெத்தில்டிரையாக்சோ இரேனியம், மெத்தில் மூவாக்சோ இரேனியம் என்ற பெயர்களாலும் அழைக்கலாம். நிறமற்ற இத்திண்மம் எளிதில் ஆவியாகும். சில ஆய்வக்கூடச் சோதனைகளில் வினையூக்கியாக இச்சேர்மத்தைப் பயன்படுத்துகிறார்கள். மெத்தில் இரேனியம் மூவாக்சைடில் இரேனியம் ஒரு மெத்தில் மற்றும் மூன்று ஆக்சோ ஈந்தணைவிகள் சேர்ந்த நான்முக ஒருங்கிணைப்பு வடிவத்தைப் பெற்றுள்ளது. இரேனியத்தின் ஆக்சிசனேற்ற எண் +7 ஆகும்.

மெத்தில் இரேனியம் டிரையாக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
மெத்தில்டிரையாக்சோ இரேனியம்
இனங்காட்டிகள்
70197-13-6 Y
ChemSpider 10621726 N
InChI
  • InChI=1S/CH3.3O.Re/h1H3;;;; N
    Key: PQTLALPZRPFYIT-UHFFFAOYSA-N N
  • InChI=1/CH3.3O.Re/h1H3;;;;/rCH3O3Re/c1-5(2,3)4/h1H3
    Key: PQTLALPZRPFYIT-YHFCCQKIAF
யேமல் -3D படிமங்கள் Image
  • C[Re](=O)(=O)=O
பண்புகள்
CH3ReO3
வாய்ப்பாட்டு எடை 249.24 கிராம்/மோல்
தோற்றம் வெண் தூள்
உருகுநிலை 112 °C (234 °F; 385 K)
நீரில் நன்றாகக் கரையும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
S-சொற்றொடர்கள் S22, S23, S24/25
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

வர்த்தக முறையிலும் மெத்தில் இரேனியம் மூவாக்சைடு கிடைக்கிறது. பலவழி முறைகளில் இதைத் தயாரிக்கிறார்கள். டெட்ராமெத்தில் வெள்ளீயத்தையும் Re2O7 சேர்மத்தையும் வினைபுரியச் செய்து தயாரிப்பது முக்கியமான ஒரு முறையாகும் :[1]

Re2O7 + (CH3)4Sn → CH3ReO3 + (CH3)3SnOReO3.

இதையொத்த ஆல்க்கைல் மற்றும் அரைல் வழிப்பெறுதிகளும் அறியப்படுகின்றன. RReO3 வகைச் சேர்மங்கள் இலுயிசு அமிலங்களாகச் செயல்படுகின்றன. ஆலைடுகள் மற்றும் அமீன்களுடன் இவை 1:1, 1:2 கூட்டுசேர் பொருள்களாக உருவாகின்றன.

பயன்கள்

தொகு

பல்வேறு நிலைமாற்ற வினைகளில் மெத்தில் இரேனியம் மூவாக்சைடு ஒரு பல்லின வினையூக்கியாகச் செயல்படுகிறது. 25 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஒலிபீன் மறுபகிர்வு வினைக்கு வினையூக்கியாகச் செயல்படும் Al2O3/SiO2 வினையூக்கிகளுக்கு துணையாகச் செயல்படுகிறது.

கரைசலில் மெத்தில் இரேனியம் டிரையாக்சைடு ஐதரசன் பெராக்சைடுடனான ஆக்சிசனேற்றத்தை ஊக்குவிக்கிறது. விளிம்புநிலை ஆல்க்கைன்கள் தொடர்புடைய அமிலம் அல்லது எசுத்தரைக் கொடுக்கின்றன. ஐதரசன் அணு இல்லாத உள் ஆல்கைன்கள் டைகீட்டோன்களையும், ஆல்க்கீன்கள் ஈப்பாக்சைடுகளையும் கொடுக்கின்றன. மேலும், ஆல்டிகைடுகளையும், டையசோ ஆல்க்கேன்களையும் ஆல்க்கீன்களாக மாற்றும் வினைகளையும் இது ஊக்குவிக்கிறது[2]. அமீன்களை சோடியம் பெர்கார்பனேட்டுடன் சேர்ந்து என்-ஆக்சைடுகளாக மாற்றுவதையும் இது ஊக்குவிக்கிறது[3].

மேற்கோள்கள்

தொகு
  1. Herrmann, W. A.; Kratzer R. M.; Fischer R. W. (1997). "Alkylrhenium Oxides from Perrhenates: A New, Economical Access to Organometallic Oxide Catalysts". Angew. Chem. Int. Ed. Engl. 36 (23): 2652–2654. doi:10.1002/anie.199726521. 
  2. Hudson, A. “Methyltrioxorhenium” Encyclopedia of Reagents for Organic Synthesis. John Wiley & Sons: New York, 2002.
  3. Jain, Suman L.; Joseph, Jomy K.; Sain, Bir (2006). "Rhenium-Catalyzed Highly Efficient Oxidations of Tertiary Nitrogen Compounds to N-Oxides Using Sodium Percarbonate as Oxygen Source". Synlett: 2661-2663. doi:10.1055/s-2006-951487. 

.