மெத்தில் 2-புளோரோ அக்ரைலேட்டு
மெத்தில் 2-புளோரோ அக்ரைலேட்டு (Methyl 2-fluoroacrylate) என்பது C4H5FO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் அக்ரைலேட்டு எசுத்தர் உப்பாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. மெத்தில் 2-புளோரோ அக்ரைலேட்டின் மூலக்கூற்று எடை 104.08 ஆகும். இந்த இரசாயனத்தின் முறையான பெயர் மெத்தில் 2-புளோரோபுரோப்-2-ஈனோயேட்டு என்பதாகும். தொழில்துறை வேதியியலில் இயந்திரம் மற்றும் ஒளியியல் பண்புகள் கொண்ட அக்ரைலேட்டு பலபடிகளை உற்பத்தி செய்ய இது பயன்படுத்தப்படுகிறது.[1] பூச்சி ஊட்ட எதிர்ப்பு பொருளான 2-அசாபைசைக்ளோ[2.1.1]எக்சேன் தயாரிக்கவும் பயன்படுகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மெத்தில் 2-புளோரோபுரோப்-2-ஈனோயேட்டு | |
வேறு பெயர்கள்
மெத்தில் 2-புளோரோ அக்ரைலேட்டு
2-புளோரோ-2-புரோப்பினாயிக் அமில மெத்தில் எசுத்தர் 2-புளோரோ அக்ரைலிக் அமில மெத்தில் எசுத்தர் | |
இனங்காட்டிகள் | |
2343-89-7 | |
ChemSpider | 2062679 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 2782524 |
| |
UNII | 3P6DG2B57G |
பண்புகள் | |
C4H5FO2 | |
வாய்ப்பாட்டு எடை | 104.08 g·mol−1 |
தோற்றம் | ஒளிபுகும் நீர்மம் |
அடர்த்தி | 1.114 கி/மி.லி @ 20 °செல்சியசில் |
உருகுநிலை | −42 °C (−44 °F; 231 K) |
கொதிநிலை | 91 °செல்சியசு @ 750 மி.மீ.பாதரசம் |
சிறிதளவு கரையும் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.39 @ 20 °செல்சியசில் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தீங்குகள்
தொகுமெத்தில் 2-புளோரோ அக்ரைலேட்டு மிகவும் எளிதாகத் தீப்பற்றி எரியும். உள்ளிழுத்தால், தோலுடன் தொடர்பு கொண்டால் அல்லது விழுங்கினால் தீங்கு விளைவிக்கும். கண்கள், சுவாச அமைப்பு மற்றும் தோல் ஆகிய உறுப்புகளில் எரிச்சலூட்டும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Fu, Boqiao; Cao, Zhen; Wu, Boying; Mao, Chongyang; Qin, Caiqin; Chen, Shigui (2022-08-12). "Novel facile method for the synthesis of methyl 2-fluoro-3-hydroxypropanoate from Claisen salts and formaldehyde in water". Phosphorus, Sulfur, and Silicon and the Related Elements 197 (12): 1277–1283. doi:10.1080/10426507.2022.2097232. பன்னாட்டுத் தர தொடர் எண்:1042-6507. http://dx.doi.org/10.1080/10426507.2022.2097232.
- ↑ Wiesmann, U. N.; DiDonato, S.; Herschkowitz, N. N. (1975-10-27). "Effect of chloroquine on cultured fibroblasts: release of lysosomal hydrolases and inhibition of their uptake". Biochemical and Biophysical Research Communications 66 (4): 1338–1343. doi:10.1016/0006-291x(75)90506-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:1090-2104. பப்மெட்:4. https://pubmed.ncbi.nlm.nih.gov/4.
- ↑ Material Safety Data Sheet. SynQuest Laboratories, Inc. Alachua, FL. Revised February, 2011