மெத்தில் 2- புரோமோ அசிட்டேட்டு
மெத்தில் 2- புரோமோ அசிட்டேட்டு (Methyl 2-bromoacetate) என்பது C3H5BrO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். மெத்தில் புரோமோ அசிட்டேட்டு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கலாம்.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மெத்தில் புரோமோ அசிட்டேட்டு | |
வேறு பெயர்கள்
புரோமோ அசிட்டிக் அமில மெத்தில் எசுத்தர், மெத்தில் α-புரோமோ அசிட்டேட்டு
| |
இனங்காட்டிகள் | |
96-32-2 | |
ChemSpider | 54945 |
EC number | 202-499-2 |
InChI | |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24849708 |
| |
UNII | LI6481MCM6 |
பண்புகள் | |
C3H5BrO2 | |
வாய்ப்பாட்டு எடை | 152.98 g·mol−1 |
அடர்த்தி | 1.6±0.1 கி/செ.மீ3[1] |
கொதிநிலை | 154 °C (309 °F; 427 K) |
கரைதிறன் | நீரில் கரையும் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H301, H311, H314, H335 | |
P260, P261, P264, P270, P271, P280, P301, P310, P330, P331, P302, P352, P303, P361 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 63 °C (145 °F; 336 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பண்புகள்
தொகுமெத்தில் 2-புரோமோ அசிட்டேட்டு நிறமற்றும் அல்லது வைக்கோல் நிறத்திலும் ஒரு நீர்மமாகக் காணப்படுகிறது. கூர்மையான வாசனையும் ஊடுருவக்கூடிய தன்மையும் கொண்டுள்ளது. தண்ணீரில் கரையக்கூடியது மற்றும் தண்ணீரை விட அதிக அடர்த்தியும் கொண்டது.[2] அமிலங்கள், காரங்கள், ஆக்சிசனேற்ற முகவர்கள் மற்றும் ஒடுக்கும் முகவர்களுடன் பொருந்தாது.[3]
பயன்கள்
தொகுமெத்தில் புரோமோ அசிட்டேட்டு ஒரு ஆல்கைலேற்றும் முகவர் ஆகும். பீனால் மற்றும் அமினோ குழுக்களை ஆல்கைலேற்றம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.[4][5] உயிர்ச்சத்துகள் மற்றும் மருந்துகளை தயாரிக்க பயன்படுகிறது. பொதுவாக இசுடைடின் இரசாயன மாற்ற வினைகளுக்கான வேதி மாற்ற வினைபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] கூடுதலாக, குமாரின்கள் மற்றும் சிசு-வளையபுரோப்பேன்கள் ஆகியவற்றினை தயாரிக்க உதவும் தொகுப்பு வினைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இணைகாரங்களுடன் வினைபுரிந்து ஆல்கைலேற்ற கார்பன் அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது.[3]
பாதுகாப்பு
தொகுமெத்தில் புரோமோ அசிட்டேட்டை உட்கொள்வதாலும் உள்ளிழுப்பதாலும் நச்சுத்தன்மையை உண்டாக்கும். தோல் மற்றும் கண்களை எரிச்சலூட்டும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "CSID:54945". ChemSpider. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
- ↑ 2.0 2.1 2.2 "Methyl Bromoacetate - Compound Summary for CID 60984". PubChem Compound Database. USA: National Center for Biotechnology Information. Identification. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
- ↑ 3.0 3.1 "A10605 Methyl bromoacetate, 98+%". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
- ↑ Piątek, Piotr; Jurczak, Janusz (25 September 2002). "A selective colorimetric anion sensor based on an amide group containing macrocycle†". The Royal Society of Chemistry.
- ↑ Raju, B.; Murphy, E.; Levy, L.A.; Hall, R.D.; London, R.E. (1 March 1989). "A fluorescent indicator for measuring cytosolic free magnesium". The American Journal of Physiology 256 (3 Pt 1): C540-8. doi:10.1152/ajpcell.1989.256.3.C540. பப்மெட்:2923192.