மெத்தீனியம்
மெத்தீனியம் (Methenium) என்பது CH+
3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு நேர்மின் அயனியாகும். கரிம வேதியியலில் மெத்திலியம், கார்பீனியம், மெத்தில் நேர்மின் அயனி, புரோட்டானேற்ற மெத்திலீன் என்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. [1] ஒரு புரோட்டான் சேர்க்கப்பட்ட மெத்திலீன் உருபாக (:CH2) அல்லது ஓர் எலக்ட்ரான் நீக்கப்பட்ட மெத்தில் உருபாக (•CH3) இந்த அயனியைப் பார்க்க முடியும். நேர்மின் கார்பனும் ஈனியம் அயனியும் சேர்ந்து எளிய கார்பீனியம் அயனிகள் உருவாகின்றன. [2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கார்பேனிலியம்
| |
வேறு பெயர்கள்
மெத்தில் நேர்மின் அயனி; மெத்திலியம்
| |
இனங்காட்டிகள் | |
14531-53-4 | |
ChEBI | CHEBI:29437 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 644094 |
| |
பண்புகள் | |
CH3 | |
வாய்ப்பாட்டு எடை | 15.04 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கட்டமைப்பு
தொகுமும்மடிப்பு சீரொழுங்கு கொண்ட சமதள கட்டமைப்பை மெத்தீனியம் அயனி ஏற்பதாக பரிசோதனை, கணக்கீடுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. sp2 இனக்கலப்புக்கு கார்பன் அணு சரியான ஒரு மூலப்படிம உதாரணமாகும்.
தயாரிப்பு மற்றும் வினைகள்
தொகுமெத்தில் உருபை [[புற ஊதாக் கதிர்|புற ஊதா ஒளி அயனியாக்கம் செய்வதன் மூலம் குறைந்த அழுத்த பொருண்மை நிறமாலை ஆய்வுகளுக்குத் தேவையான மெத்தீனியம் தயாரிக்க முடியும். [2] C+ மற்றும் Kr+ போன்ற ஒற்றை அணு நேர்மின் அயனிகளை நடுநிலை மீத்தேனுடன் மோதச் செய்தும் மெத்தீனியம் தயாரிக்கலாம். [3] இத்தகைய நிபந்தனை நிலைகளில் இது அசிட்டோநைட்ரைலுடன் (CH3CN) வினைபுரிந்து (CH3)2CN+ அயனியை உருவாக்குகிறது. [4].
1 எலக்ட்ரான் வோல்ட்டுக்கும் குறைவான தாழ் ஆற்றல் எலக்ட்ரான் பற்றுதல் மூலம் இது தன்னிச்சையாக பிரிகையடைகிறது. [5]
அமுக்கப்பட்ட நிபந்தனையில் இது ஓர் இடைநிலையாக எப்போதாவது எதிர்கொள்ளப்படுகிறது. புரோட்டானேற்றம் அல்லது மீத்தேனுடன் FSO3H-SbF5. சேர்த்து ஐதரைடு நுண்மையாக்கம் செய்து ஒரு வினைத்திற இடைநிலையாகவும் முன்மொழியப்படுகிறது. ஆல்க்கேன்களிடம் கூட மெத்தீனியம் அயனி மிகுந்த வினைத்திறனை வெளிப்படுத்துகிறது. [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ions, Free Radicals, and Radical-Ion", Nomenclature of Organic Compounds, Advances in Chemistry (in ஆங்கிலம்), vol. 126, AMERICAN CHEMICAL SOCIETY, June 1974, pp. 216–224, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/ba-1974-0126.ch028, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0841201910
- ↑ 2.0 2.1 L. Golob, N. Jonathan, A. Morris, M. Okuda, K.J. Ross (1972), "The first ionization potential of the methyl radical as determined by photoelectron spectroscopy". Journal of Electron Spectroscopy and Related Phenomena, volume 1, issue 5, pp. 506–508 எஆசு:10.1016/0368-2048(72)80022-7
- ↑ R.B. Sharma, N.M. Semo, W.S. Koski (1987), "Dynamics of the reactions of methylium, methylene radical cation, and methyliumylidene with acetylene". Journal of Physical Chemistry, volume 91, issue 15, pp. 4127–4131 எஆசு:10.1021/j100299a037
- ↑ Murray J. McEwan, Arthur B. Denison, Wesley T. Huntress Jr., Vincent G. Anicich, J. Snodgrass, M.T. Bowers (1989), "Association reactions at low pressure. 2. The methylium/methyl cyanide system". Journal of Physical Chemistry, volume 93, issue 10, pp. 4064–4068. எஆசு:10.1021/j100347a039
- ↑ E.M. Bahati, M. Fogle, C.R. Vane, M.E. Bannister, R.D. Thomas and V. Zhaunerchyk (2009), "Electron-impact dissociation of CD+
3 and CH+
3 ions producing CD+
2, CH+
and C+
fragment ions". Physical Review, volume 79, article 052703 எஆசு:10.1103/PhysRevA.79.052703 - ↑ Hogeveen, H.; Lukas, J.; Roobeek, C. F. (1969). "Trapping of the methyl cation by carbon monoxide; formation of acetic acid from methane" (in en). Journal of the Chemical Society D: Chemical Communications 0 (16): 920. doi:10.1039/c29690000920. பன்னாட்டுத் தர தொடர் எண்:0577-6171.