மென் தோள் மனுக்கோடியா
மென் தோள் மனுக்கோடியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | M. chalybatus
|
இருசொற் பெயரீடு | |
Manucodia chalybatus (போர்சுடர், 1781) |
மென் தோள் மனுக்கோடியா (Manucodia chalybatus) என்பது நடுத்தர அளவிலான, அதாவது 36 செமீ நீளமான, பசிய நீலம், கறுப்பு மற்றும் ஊதா நிறத்திலான சந்திரவாசி இனப் பறவையொன்றாகும். இதன் வால் நீளமானதாயும், கண்கள் செந்நிறமாயும் இருப்பதுடன் மார்பு இறகுகள் வசீகரமான பசிய நிறத்திற் காணப்படும். இவ்வினத்தின் ஆண், பெண் பறவைகள் உருவமைப்பில் ஒத்திருப்பினும் பெண் பறவையானது ஆண் பறவையிலும் ஒப்பீட்டளவிற் சிறியதாயும் ஊதா நிறம் ஓரளவு குறைந்ததாயும் இருக்கும்.
மென் தோள் மனுக்கோடியா பறவையினம் யாப்பென் மனுக்கோடியாவை உருவத்தில் ஒத்துக் காணப்படினும், வெண்கலம் போன்ற மஞ்சட் பச்சை நிறமான கழுத்து இறகுகளின் மூலம் வேறுபடுத்தி அறியப்படுகிறது. இப்பறவைகள் நியூகினித் தீவின் தாழ்நில மற்றும் மலைசார் காடுகளிலும் இந்தோனேசியாவின் மேலைப் பப்புவா மாநிலத்தின் மிசூல் தீவிலும் பரவிக் காணப்படுகின்றன. இதன் இயலிடத்தில் மிகப் பொதுவாகக் காணப்படும் பறவையினங்களில் மென் தோள் மனுக்கோடியாவும் ஒன்றாகும். இவற்றின் முதன்மையான உணவுகள் பழங்களும் அத்தி வகைகளுமாகும்.
மேற்கோள்கள்
தொகு- Clench, Mary H. 1978. Trachael Elongation in Birds-of-Paradise. Condor, 80(4):423-430.
- பன்னாட்டு பறவை வாழ்க்கை (2004). Manucodia chalybatus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 30 October 2006. இவ்வினம் ஏன் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான நியாயப்படுத்தல்களைத் தரவுத்தளம் கொண்டுள்ளது.
வெளித் தொடுப்புகள்
தொகு- BirdLife Species Factsheet பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்
- ஐயுசிஎன் செம்பட்டியல்
- ↑ [[பன்னாட்டு பறவை வாழ்க்கை]] (2012). "Manucodia chalybatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)