மெருதுங்கா

குசராத்தைச் சேர்ந்த ஒரு இடைக்கால அறிஞர்

மெருதுங்கா (Merutunga) இந்தியாவின் இன்றைய குசராத்தைச் சேர்ந்த ஒரு இடைக்கால அறிஞரும் அஞ்சலா கச்சாவின் சுவேதாம்பர சைனத் துறவியும் ஆவார். பொ.ஊ.1306 - இயற்றப்பட்ட இவரது பிரபந்த சிந்தாமணி என்ற சமசுகிருத உரைக்காக இவர் தற்போது மிகவும் பிரபலமானவர்.[1][2] இவர் 1350-இல் சாவ்தா, சோலாங்கி மற்றும் வகேலா வம்சங்களின் காலவரிசையை விவரிக்கும் விசாரஸ்ரேணி என்ற நூலையும் எழுதினார். [3][4]

மெருதுங்கா
பிறப்பு14ஆம் நூற்றாண்டு
இறப்பு14ஆம் நூற்றாண்டு

ஒரு வரலாற்றாசிரியராக, இவரது சமகாலத்தவர்களுடனும் நவீன வரலாற்றாசிரியர்களுடனும் ஒப்பிடுகையில், மெருதுங்காவின் படைப்புகள் பொதுவாக தரம் குறைந்ததாகக் கருதப்படுகிறது. [5][6] "மெருதுங்காவின் கதைகளில் தேதிகள் மிகவும் பலவீனமானவையாக உள்ளதாக" குசராத்தி வரலாற்றாசிரியர் கே. எம். முன்ஷி கூறுகிறார்.[7] மேலும், பிரித்தானிய இந்தியவியலாளர் ஏ.கே. வார்டர் மெருதுங்காவின் வரலாறுகளை "முற்றிலும் நம்பமுடியாதவை" என்றும் அவரது கதைகள் "அடிப்படையில் புனைகதை" என்றும் நிராகரிக்கிறார். [8]

சான்றுகள்

தொகு
  1. Cort 2001, ப. 35.
  2. Sen 1999, ப. 79.
  3. Kailash Chand Jain 1991, ப. 85.
  4. Rajyagor, S. B.; Chopra, Pran Nath (1982). "Chapter II: Source Materials of History of Gujarat". History of Gujarat. New Delhi: S. Chand & Company Ltd. p. 17. இணையக் கணினி நூலக மைய எண் 12215325.
  5. Crouzet 1965, ப. 237.
  6. Arai 1978.
  7. Mahesh Singh 1984, ப. 30.
  8. A. K. Warder 1992, ப. 151.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெருதுங்கா&oldid=3453183" இலிருந்து மீள்விக்கப்பட்டது