மெழுகுப் புழு
மெழுகுப் புழு | |
---|---|
சிறிய மெழுகு அந்துப்பூச்சிக் கம்பளிப்புழு, நீளம் 13-16 மிமீ. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
தரப்படுத்தப்படாத: | Obtectomera
|
பெருங்குடும்பம்: | Pyraloidea
|
குடும்பம்: | Pyralidae Latreille, 1802
|
மாதிரி இனம் | |
Lesser wax moth (Achroia grisella) Greater wax moth (Galleria mellonella) |
மெழுகுப் புழுக்கள் (Waxworms) என்பவை மெழுகு அந்துப்பூச்சிகளின் புழுக்கள் ஆகும். இது முனகும் அந்துப்பூச்சி குடும்பத்தைச் சேர்ந்ததாகும் (பிர்ரலிடே). இதில் இரண்டு நெருங்கிய தொடர்புடைய இனங்கள் வணிகரீதியாக இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன அவை - சிறிய மெழுகு அந்துப்பூச்சி (அக்ரோரியா கிரிஸல்லா) மற்றும் அதிக மெழுகு அந்துப்பூச்சி (கல்லேரியா மெல்லோனெல்லா) என்பவையாகும். இதில் மற்றொரு வகை இன லார்வாவின் பெயர் இந்திய உணவு அந்துப்பூச்சி (Plodia interpunctella), இந்த இனம் வணிக ரீதியாக கிடைக்கவில்லை.
வயதுவந்த அந்துப்பூச்சிகள் சில நேரங்களில் "தேனீ பூச்சிகள்" என்று அழைக்கப்படுகின்றன.
மெழுகுப் புழுக்கள் நடுத்தர-வெள்ளை கம்பளிப் பூச்சிகளாகும் இவை கருப்பு-நிற கால்கள் மற்றும் சிறிய, கருப்பு அல்லது பழுப்பு தலைகள் கொண்டிருக்கும். இந்தக் கம்பளிப்புழுவை சிலர் மீன்பிடிப்பதற்குப் பயன்படுத்துவார்கள்.
காடுகளில், இவை தேனீக்களின் கூடுகளில் ஒட்டுண்ணிகள் போல் வாழ்கிறார்கள் மற்றும் அதன் கூட்டுப்புழுக்கள், மகரந்தம், தேனீக்களி ன்தோல் போன்றவற்றை சாப்பிடுகிறன. மேலும் தேன் மெழுகையும் உண்கின்றன மெழுகை உண்பதாலேயே இவை மெழுகுப் புழு என்ற பெயரைப் பெற்றன. தேனீ வளர்ப்பவர்கள் மெழுகுப் புழுக்களை தீங்குயிர்கள் என்று கருதுகின்றனர்.[1]
நெகிழி சிக்கலுக்கான தீர்வு
தொகுஇந்தப் பூச்சியின் தோற்றுவளரிகள் (லார்வா) நெகிழியைச் செரிக்கக்கூடிய விசித்திர இயல்பைப் பெற்றிருக்கின்றன என்பதை ஐரோப்பிய ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இந்தப் புழு பாலித்தீனின் வேதிப் பிணைப்புகளை எளிதில் உடைக்கக்கூடியதாக இருக்கின்றது. ஸ்பானிய தேசிய ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த ஃபெதெரிக்கா பெர்தோக்கீனி என்ற அறிவியலாளர் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பூச்சிகளின் விசித்திர இயல்புகளைத் தற்செயலாகக் கண்டறிந்தார். பெர்தோக்கீனியின் மனைவி ஒரு தேனீ வளர்ப்பாளர். தேனடைகளிலிருந்து பலமுறை புழுக்களைக் களைந்து ஒரு நெகிழி பையில் அவற்றைப் போட ஆரம்பித்தார். கூடிய விரைவிலேயே அந்தப் புழுக்களெல்லாம் நெகிழியை உண்டு அதனால், பைகளில் துளைகள் விழ ஆரம்பித்தன. இதைக் கண்டபிறகு தன் சகாக்களுடன் ஆய்வுகளை மேற்கொண்டார். அண்மையில் ‘கரண்ட் பயாலஜி’ என்ற ஆய்விதழில் அவர்கள் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில், அந்தப் புழுக்களால் நெகிழியை எப்படிச் செரிக்க முடிகிறது என்பதைக் குறித்து கண்டுபிடித்ததை விளக்கியுள்ளார்கள். உலகின் மிக மோசமான மாசுக்களில் ஒன்றான நெகிழி மேலும் மேலும் சேர்ந்துகொண்டே போவதை இந்தக் கண்டுபிடிப்பு தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கை தோன்றியிருக்கிறது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Victoria, Department of Environment and Primary Industries,. "Wax Moth - A Pest of Combs and Honey Bee Products" (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). Archived from the original on 2017-04-27. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
{{cite web}}
: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link) - ↑ ஜோனா எங்கெல் ப்ரோம்விச் (16 மே 2017). "பிளாஸ்டிக் பிரச்சினைக்கு ஒரு தூரத்து ஒளி". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2017.