மேடம் (விண்மீன் குழாம்)

மேடம் (Aries) அல்லது மேழம் என்பது இராசிச் சக்கரத்தைச் சேர்ந்த ஒரு விண்மீன் குழாம் ஆகும். இது வட துருவத்தில் மீனம் விண்மீன் குழாத்திற்கு கிழக்கிலும் இடபம் விண்மீன் குழாத்திற்கு மேற்கிலும் அமைந்துள்ளது. இதன் ஆங்கிலப் பெயரான எரிசு என்பது இலத்தீன் மொழியில் வளர்ப்புச் செம்மறியாடு என்று பொருள்படுகிறது. மேடம் விண்மீன் குழாத்தின் குறியீடான (Unicode ♈) செம்மறியாட்டின் கொம்பின் வடிவில் அமைந்துள்ளது. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வானியலாளரான தொலெமி தனது அல்மாகேசுடு நூலில் குறிப்பிட்ட 48 விண்மீன் குழாம்கலீல் இதுவும் ஒன்றாகும். இது 88 நவீன விண்மீன் குழாம்களிலும் ஒன்றாக விளங்குகிறது. இது ஒரு நடு-அளவிலான விண்மீன் குழாம் ஆகும். இது அனைத்து அளவிலும் 39வது இடத்தில் உள்ளது. இதன் பரப்பளவு 441 சதுர பாகைகளில் (வானக்கோளத்தின் 1.1%) அமைந்துள்ளது.

Aries
{{{name-ta}}}
விண்மீன் கூட்டம்
Aries
{{{name-ta}}} இல் உள்ள விண்மீன்கள்
சுருக்கம்Ari[1]
Genitiveஏரிடிஸ்
ஒலிப்பு/ˈɛərz/, formally /ˈɛərɪ.z/; genitive /əˈr.[invalid input: 'ɨ']t[invalid input: 'ɨ']s/
அடையாளக் குறியீடுthe Ram
வல எழுச்சி கோணம்01h 46m 37.3761s–03h 29m 42.4003s[2] h
நடுவரை விலக்கம்வார்ப்புரு:Decவார்ப்புரு:Dec[2]°
பரப்பளவு441[3] sq. deg. (39th)
முக்கிய விண்மீன்கள்4, 9
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
67
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள்6
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள்2
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள்2[a]
ஒளிமிகுந்த விண்மீன்Hamal (2.01m)
மிக அருகிலுள்ள விண்மீண்Teegarden's Star (SO 0253+1652)[4]
(12.58 ly, 3.86 pc)
Messier objects0
எரிகல் பொழிவு
  • May Arietids
  • Autumn Arietids
  • Delta Arietids
  • Epsilon Arietids
  • Daytime-Arietids
  • Aries-Triangulids
அருகிலுள்ள
விண்மீன் கூட்டங்கள்
Visible at latitudes between +90° and −60°.
திசம்பர் மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.


குறிப்புகள்

தொகு
  1. The nearby stars that are named or otherwise known are Teegarden's star and TZ Arietis. The distance can be calculated from their பார்வை இடவழு, listed in SIMBAD, by taking the inverse of the parallax and multiplying by 3.26.

மேற்கோள்கள்

தொகு
  1. Russell 1922, ப. 469.
  2. 2.0 2.1 "Aries, constellation boundary". The Constellations (International Astronomical Union). http://www.iau.org/public/constellations/#ari. பார்த்த நாள்: 14 February 2014. 
  3. 3.0 3.1 Thompson & Thompson 2007, ப. 90–91.
  4. RECONS, The 100 Nearest Star Systems.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேடம்_(விண்மீன்_குழாம்)&oldid=3779781" இலிருந்து மீள்விக்கப்பட்டது