மேத்யூ சூறாவளி
| ||||
---|---|---|---|---|
| ||||
தற்போதைய புயல் தரம் தரம் 1 (1-நிமி சராசரி) | ||||
தற்போதைய நிலவரம்: |
காலை 8:00 கி.நே.வ (12:00 ஒ.அ.நே) அக்டோபர் 8 | |||
அமைவு: | தென் கரொலைனா, சார்லசிடனில் இருந்து 35 கிமீ தெ.தெ.கி | |||
காற்று வேகம்: |
140 கிமீ/ம sustained (1-min mean) gusting to 205 கிமீ/ம | |||
அமுக்கம்: | 962 மி.பா (hPa; 28.41 inHg) | |||
நகர்வு: | 19 கிமீ/ம வடகிழக்கு | |||
தற்போதைய புயல் நிலவரங்களுக்கு பார்க்க. |
மேத்யூ சுறாவளி (Hurricane Matthew) எயிட்டி, ஜமேக்கா, கியூபா, டொமினிக்கன் குடியரசு, பகாமாசு நாடுகளில் தாக்கமேற்படுத்திவிட்டு நிகழ்நேரத்தில் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவின், குறிப்பாக புளோரிடா, மற்றும் ஜார்ஜியா, தென் கரொலைனா, வட கரொலைனா மாநிலங்களின் கிழக்கு கடற்கரையை ஒட்டி நகர்ந்துகொண்டிருக்கின்ற வலிமைமிக்க வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும்.[1] இது 2007ஆம் ஆண்டில் வீசிய ஃவீலிக்சு சூறாவளியை அடுத்து அத்திலாந்திக்குப் பகுதியில் ஐந்தாம் வகை சூறாவளிகளில் முதலாவதாகும். செப்டம்பர் 22 அன்று ஆப்பிரிக்க கடலோரத்திலிருந்து தீவிர அலையோட்டத்திலிருந்து உருவானது; மேற்கு நோக்கு நகர்ந்து செப்டம்பர் 28 அன்று லீவர்டு தீவுகளின் கிழக்குப் புறத்தில் சூறாவளியாக மாறியது. விரைவிலேயே ஐந்தாம் வகுப்பு சூறாவளியாக வலிவுற்றது.
இந்தச் சூறாவளியால் குறைந்தது 889 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக கருதப்படுகின்றது; எயிட்டியில் 877 பேரும் புளோரிடாவில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அக்டோபர் 6 அன்று ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா புளோரிடாவில் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார்.[2] பின்னர் கூட்டரசின் பேரிடர் அறிவிக்கையில் ஜார்ஜியாவும் தென் கரோலினாவும் சேர்க்கப்பட்டன.[3]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Matthew Becomes the Fifth Hurricane of the 2016 Atlantic Hurricane Season; Jamaica, Hispañola, Cuba, Bahamas Threat". The Weather Channel]date=செப்டம்பர் 29, 2016.
- ↑ Mazzei, Patricia; Clark, Kristen (அக்டோபர் 6, 2016). "Obama signs Florida emergency declaration to deal with Hurricane Matthew". The Miami Herald.
- ↑ Merle, Renae; Berman, Mark (அக்டோபர் 6, 2016). "Hurricane Matthew, now a Category 3 storm, approaches Florida; emergencies declared in three states". The Washington Post.