மேம்பட்ட தொடர்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
நேபாளத்தின் காட்மாண்டுவில் உள்ளது
மேம்பட்ட தொடர்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Institute of Advanced Communication, Education and Research) நேபாளத்தின் காத்மாண்டுவில் அமைந்துள்ள ஓர் ஆராய்ச்சி அடிப்படையிலான கல்லூரி ஆகும்.[1][2] 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் பொக்காரா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலக் கல்வியுடன் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியலில் மேம்பட்ட ஆராய்ச்சிப் பட்டங்களை வழங்குவது இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.[3] நாட்டில் ஆங்கிலத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் வழங்கும் ஒரே கல்லூரி என்ற சிறப்பும் இந்நிறுவனத்திற்கு உண்டு.[3]
நிறுவப்பட்டது | 2001 |
---|---|
வகை | கல்லூரி |
இணைப்புகள் | பொக்காரா பல்கலைக்கழகம் |
கல்லூரி முதல்வர் | கிருட்டிணா நிரௌலா |
ஆசிரியர்கள் | 31 |
மாணவர்கள் | 200+ |
அமைவு | பீமசேனகோலா மார்கா , பழைய பானேசுவர், காட்மாண்டு, நேபாளம் |
வளாகம் | நகரம் |
இணையதளம் | IACER.edu.np |
மேற்கோள்கள்
தொகு- ↑ "An Institute with a difference". The Himalayan Times (Kathmandu: International Media Network Nepal (Pvt) Ltd). 2005-09-13. https://thehimalayantimes.com/entertainment/an-institute-with-a-difference/. பார்த்த நாள்: 2019-08-27.
- ↑ Samiti, Rastriya Samachar (2016-07-10). "New anthology of English stories launched". The Himalayan Times (Kathmandu: International Media Network Nepal Pvt. Ltd.) இம் மூலத்தில் இருந்து 2019-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191209130242/https://thehimalayantimes.com/lifestyle/art-culture/new-anthology-english-stories-launched-iacer/. பார்த்த நாள்: 2019-12-09.
- ↑ 3.0 3.1 "Institute of Advanced Communication, Education and Research (IACER)". edusanjal. edusanjal Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
புற இணைப்புகள்
தொகு- IACER.edu.np பரணிடப்பட்டது 2022-05-22 at the வந்தவழி இயந்திரம்