மையிட்டான்பட்டி
மையிட்டான்பட்டி (Maittanpatti) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.[1]
மையிட்டான்பட்டி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°24′N 77°34′E / 9.40°N 77.57°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை |
அரசு | |
• வகை | ஊராட்சி |
ஏற்றம் | 109 m (358 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,629 |
மொழி | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625701 |
தொலைபேசி குறியீடு | 04549 |
அருகில் உள்ள நகரம் | மதுரை |
நிலவியல்
தொகுமையிட்டான்பட்டியின் அமைவிடம் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை முறையே 9°40' N மற்றும் 77°57'E ஆகும். இக்கிராமம் கள்ளிக்குடியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது
மக்கள்தொகை
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மையிட்டான்பட்டியின் மக்கள் தொகை 1,629ஆக உள்ளது. இதில் 823 பேர் பெண்கள் மற்றும் 806 பேர் ஆண்கள் ஆவர்.[2]
போக்குவரத்து
தொகுபேருந்து எண் 13 விருதுநகருக்கு 2 முறையும், திருமங்கலம், மதுரைக்கு 4 முறையும் சென்று வருகின்றது. பேருந்து எண் 48PM மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்குத் தினமும் 3 முறை பயணிக்கின்றது.
கல்வி நிறுவனங்கள்
தொகுஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முதல் வகுப்பு முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கான கல்வியை வழங்குகிறது. மதுரை-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 7-ஐ ஒட்டி காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் மையிட்டான்பட்டியில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Maittanpatty Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-06.
- ↑ "CENSUS OF INDIA 2011, VILLAGE PANCHAYATS AND PANCHAYAT UNIONS" (PDF). Rural Development & Panchayat Raj Department, Government of TamilNadu.