மை டியர் லிசா

மை டியர் லிசா 1987ஆம் ஆண்டு வெளியான திகில் தமிழ்த் திரைப்படம்.

மை டியர் லிசா
இயக்கம்பேபி
தயாரிப்புஆஷா கிரியேசன்ஸ்
கதைபேபி
இசைரகு குமார்
நடிப்புநிழல்கள் ரவி
மனோரமா
சாதனா
ஒளிப்பதிவுநிவாஸ்
படத்தொகுப்புஜி.முரளி
வெளியீடு1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை தொகு

பேய்ப்படம்

நடிகர்கள் தொகு

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் பயிலும் கதாநாயகன் தனது காதலியுடன் நாடு திரும்புகிறார். காதலியைத் தன்னுடைய எஸ்டேட் பங்களாவில் தங்க வைக்கிறார். அங்கு வரும் அவரது நண்பர்கள் லிசா என்னும் அப்பெண்ணைக் கற்பழித்துக் கொன்று விடுகிறார்கள். காதலியைக் காணாமல் தேடும் கதாநாயகன் மனது வெறுத்து சோகமாக இருக்கிறார். அவர் மனம் மாறவேண்டும் என்று அவரது தாயார் தனது விருப்பப்படி ஒரு சாதுவான பெண்ணைத் தேடி மகனுக்கு மணமுடிக்கிறார். புதுமணத்தம்பதிகள் அந்த எஸ்டேட் பங்களாவில் குடி வருகின்றனர். கதாநாயகனின் மனைவியின் உடலில் லிசாவின் ஆவி புகுகின்றது. அநியாயமாக உயிர் விட்ட லிசா தன்னைக் கொன்றவர்களைப் பழி வாங்குகிறாள். இறுதியில் மந்திரவாதி பூஜைகள் செய்து லிசாவின் ஆவியை கதாநாயகியின் உடலில் இருந்து வெளியேற்றுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மை_டியர்_லிசா&oldid=3903337" இலிருந்து மீள்விக்கப்பட்டது