பேபி (Baby) 2015இல் வெளிவந்த தமிழ் திகில் திரைப்படம், இயக்கம் டி. சுரேஷ்.[1] இந்த படத்தின் கதையில் பிரிந்திருக்கும் கணவன்-மனைவி பற்றியும், பின்னர் அவர்களின் மகளை காப்பாற்றுவதற்காக மீண்டும் இணைவது பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது.

பேபி
இயக்கம்டி. சுரேஷ்
தயாரிப்பு
இசை
  • சதீஷ்
  • ஹரீஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுஜோன்ஸ் ஆனந்த்
படத்தொகுப்புபகத் சிங்
வெளியீடு3 சூலை 2015 (2015-07-03)(இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சக்தி (ஷிரா கார்க்), அவரது கணவனிடமிருந்து பிரிந்த பின்னர், அவளுடைய 6 வயது வளர்ப்பு மகள் அதிதியுடன்(பேபி ஸ்ரீவர்ஷினி) வாழ்ந்து வருகிறார். அவரது குடியிருப்பில், அதிதி தனது பெயரை யாரோ சொல்லக் கேட்க ஆரம்பிக்கிறாள், ஆரம்பத்தில் பயப்படுகிறாள். ஆனால் இது அடிக்கடி நடக்கிறது. தனது பிறந்த நாளைக் கொண்டாடும்போது, அதிதி குழந்தை பொம்மை ஒன்று தரையில் இருப்பதைக் காண்கிறாள். அப்போது மீண்டும் அக்குரல் அந்த பொம்மையை அவளுடைய பிறந்த நாள் பரிசாக எடுத்துக் கொள்ளும்படி சொல்கிறது. அதன் பிறகு அதிதி அந்த குரலுடன் தனது தொடர்பை வளர்த்து கொள்கிறார். ஒரு இரவில், அதிதி முன் பேய் தோன்றி தனது பெயரை ஆனி என்று எழுதுகிறது. இதை கவனித்த அதிதியின் தாய் சக்தி கவலை கொண்டு உளவியலாளரிடம் ஆலோசனை செய்கிறாள், குழந்தையுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டுமென்று அவர் சக்திக்கு அறிவுறுத்துகிறார். சக்தி, மற்றும் சிவா (மனோஜ் பாரதிராஜா போன்ற தோற்றத்தில் குழந்தை அதிதி இல்லை என்று சக்தியின் தோழி ஒருவர் கூறியதையடுத்து சக்தி கலக்கமடைகிறாள். சிவா இருக்குமிடத்திற்கு சென்று குழந்தையை அவனையே கவனித்துக் கொள்ள வேண்டுகிறாள். இருவருக்குமிடையே நடந்த விவாதத்திற்குப் பின், சிவா தனது கதையை சொல்லத் துவங்குகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதை திகில் அனுபவத்துடன் கதை கொண்டு செல்கிறது.

நடிப்பு

தொகு
  • மனோஜ் பாரதிராஜா - சிவா (சக்தியின் முன்னாள் கணவன்)
  • ஷிரா கார்க் - சக்தி (குழந்தையின் தயாராக)
  • பேபி சதன்யா - அவந்திகா (சக்தியின் உண்மைக் குழந்தை)
  • பேபி ஸ்ரீவர்ஷ்னி - அதிதி (சக்தியின் ஆறு வயது வளர்ப்பு குழந்தை)
  • அஞ்சலி ராவ் - ஆனி (பேய்)

வரவேற்பு

தொகு

பிஹிண்ட்வுட்ஸ் என்ற இணையதளம் இப்படத்தை வெகுவாக புகழ்ந்தது. படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் சிறப்பாக நடித்துள்ளனர் என்றும் அவர்களின் வசன உச்சரிப்பு மிக நன்றாக இருந்தது என்றும் பாராட்டியது. இருப்பினும், இந்த திரைப்படம் "குழந்தைகளின் மிகச்சிறந்த நடிப்பைக் கொண்டு மிகவும் ஈர்க்கக்கூடிய, வழக்கமான ஒருபேய் கதை" என்று சுருக்கமாகக் கூறுகிறது .[2]

தமிழ் சினிமா நியூஸ் பத்திரிகையில், இப்படம் இன்னொரு வழக்கமான ஒருபேய் கதை என்றும், குழந்தை நடிகைகளான "ஸ்ரீவர்ஷ்னி மற்றும் சதன்யாவின் நடிப்பிற்கும், தாயாக நடித்துள்ள ஷீரா கார்க் ஒரு பாராட்டத்தக்க நடிப்பை அளித்துள்ளார் எனவும் , நடிகர் மனோஜ் பாரதிராஜாவுக்கு இந்த படம் மீண்டும் திரையுலகிற்கு வருவதற்கு ஒரு வாய்ப்பை கொடுத்தது எனவும் சுட்டிக் காட்டியது. மேலும் படத்தின் பிரதான குறைபாடு பகத் சிங்கின் படத்தொகுப்பு எனவும், ஒட்டுமொத்தமாக, திகில் படங்களின் உண்மையான ரசிகராக இருந்தால், இதை ஒரு முறை பார்த்துவிடலாம் என விமர்சனம் வந்தது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. staff. "Baby Tamil Movie Details". Tamil Cinemaprofile. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  2. Behindwoods Review Board. "BABY TAMIL MOVIE MOVIE REVIEW". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
  3. Bala, Suthan (5 July 2015). "Baby Tamil Movie Review". Tamil Cinema News. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேபி&oldid=3660543" இலிருந்து மீள்விக்கப்பட்டது