மொறட்டுவைப் பல்கலைக்கழகம்

(மொறட்டுவப் பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மொறட்டுவைப் பல்கலைக்கழகம் [2] [3]) இலங்கையில் புகழ் பெற்ற தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது கொழும்பிற்குத் தெற்கே கட்டுப்பத்த (மொறட்டுவை) பகுதியில் அமைந்துள்ளது. [4]பல தொழில் சார்வல்லுனர்களை உருவாக்கிய இப்பல்கலைக்கழகம் http://.lk பரணிடப்பட்டது 2017-02-20 at the வந்தவழி இயந்திரம் எனும் இலங்கைக்கான இணைய வழங்கியைத் தனது ஆதர் சி.கிளாக் ஆய்வுக்கூடத்தில் கொண்டுள்ளது. மைக்ரோசாப்டின் நகர்பேசி ஆய்வுக்கூடமும் இப்பல்கலைக்கழகத்திலுள்ளது. இப்பல்கலைக்கழகம் இலங்கையில் மிகக் கூடுதலான லினக்ஸ் இயங்குதளங்களையும் கணினிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பட்டப் படிப்புகளுக்கு மேலதிகமாக வெளிவாரிப் படிப்பாக BIT (Bachelors of Information Technology) கற்கை நெறிகளையும் வழங்கி வருகின்றது. மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கூகுள் நிரல் கோடை போட்டிகளில் 2007, 2008, 2009, 2010, and 2011 ஆண்டுகளில் வென்றுள்ளனர்.[5][6][7] தவிரவும் இப்பல்கலையின் மாணவர்கள் சிறீலங்கா இமாஜின் கோப்பையிலும்[8] ஐஈஈஈ எக்சுட்ரீம் உலகளாவியப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.[9][10] கூகுள் நிரல் கோடை போட்டிகளில், 2005ஆம் ஆண்டில் இந்தப் போட்டிகள் துவங்கப்பட்டதிலிருந்து ஐந்தாண்டுகளில் மொறட்டுவ பல்கலைக்கழகம் பெற்ற விருதுகளுக்காக உலகளவில் முதல்நிலைப் பல்கலைக்கழகமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.[5]

University of Moratuwa
මොරටුව විශ්වවිද්‍යාලය
மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
University of Moratuwa Logo
முந்தைய பெயர்கள்
Katubedda Campus of University of Ceylon
குறிக்கோளுரைविद्यायेव शर्वधनम
(Vidyaiwa Sarwadhanam சமசுகிருதம், "Wisdom is all Wealth").
ஞானம் அகிலத்தின் சொத்து
உருவாக்கம்1972
வேந்தர்Dr. Roland Silva
துணை வேந்தர்பேரா. ஏ.கே.டபுள்யூ. சயவர்த்தனே [1]
நிருவாகப் பணியாளர்
500
பட்ட மாணவர்கள்4,000
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்500
அமைவிடம்கட்டுப்பத்த, மொறட்டுவை, இலங்கை
சேர்ப்புஇலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
இணையதளம்www.mrt.ac.lk

இங்கு மூன்று பிரதான துறைசார் பிரிவுகள் உண்டு. அவையாவன பொறியியல் பிரிவு, தகவல் தொழில்நுட்ப பிரிவு, கட்டிடக்கலை பிரிவு.

பொறியியல் பிரிவுதொகு

இங்கு பின்வரும் கிளைத்துறைகளில் இளமானி பொறியியல் கற்கைநெறி வழங்கப்படுகிறது.

மேற்சான்றுகள்தொகு

  1. "Prof. A.K.W. Jayawardane". 22 மார்ச் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. [1]
  3. [2]
  4. "Welcome to University of Moratuwa". 18 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 "Google Open Source Blog: Tasty New Google Summer of Code Stats". Google Open Source Blog. 18 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Google Open Source Blog: This Week's Top 10's: Universities for Google Summer of Code 2008". Google Open Source Blog. 18 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Google Open Source Blog: Who's Being Schooled?". Google Open Source Blog. 18 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Moratuwa, UCSC, Peradeniya, SLIIT and IIT through to Imagine Cup 2011 SL Final". 18 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
  9. IEEEXtreme Competition 2009[தொடர்பிழந்த இணைப்பு]
  10. "IEEEXtreme Competition: UoM team wins world prize". 2011-01-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-03-11 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புக்கள்தொகு