மொழிமாற்றி (மென்பொருள்)

கணினியியலில், மொழிமாற்றி (interpreter) என்பது ஒரு நிரல் மொழியில் எழுதப்பட்டுள்ள கட்டளைகளை நிறைவேற்றும் செய்நிரல் ஆகும். மொழிமாற்றிகள் பொதுவாக கீழ்காணும் செய்முறைகளில் ஒன்றின்படி செயல்படுகின்றன:

  1. மூலநிரலை நேரடியாக நிறைவேற்றுதல்
  2. மூல நிரலை வேறு திறன்மிகு இடைப்பட்ட நிரலாக மாற்றி உடனடியாக செயற்படுத்துதல்
  3. மொழிமாற்றி அமைப்பின் அங்கமான ஓர் நிரல்மொழிமாற்றியால் முன்னரே தொகுக்கப்பட்டு சேமிக்கப்பட்டுள்ள நிரலை வெளிப்பட செயற்படுத்துதல்[1]

முதல் வகைக்கான காட்டுகளாக லிஸ்ப், டார்ட்மவுத் பேசிக்கின் துவக்கநிலை பதிப்புகளைக் கூறலாம். இரண்டாம் வகையில் பெர்ள், பைத்தான், மேட்லேப், ரூபி போன்றன அடங்கும். மூன்றாம் வகைக்கு கலிபோர்னியா பல்கலைக்கழக சான்டியோகோ பிரிவு பாசுகல் (UCSD Pascal) எடுத்துக்காட்டாகும். மூல நிரல்கள் முன்னதாகவே தொகுக்கப்பட்டு இயந்திர சார்பற்ற நிரலாக சேமிக்கப்படுகின்றன. இவை இயக்குநேரத்தில் இணைக்கப்பட்டு மொழிமாற்றியால் அல்லது நிரல்மொழிமாற்றியால் (அவ்வப்போதைய தொகுப்பு அமைப்புகளில், JIT) செயற்படுத்தப்படுகின்றன. இசுமால்டாக் போன்ற சில அமைப்புகளில், பேசிக், ஜாவா மற்றும் சிலவும் கலந்து பயன்படுத்தப்படுகின்றன.

நிரல் மொழிகளை செயற்படுத்த பயன்படுத்தப்படும் இரு வழிமுறைகளாக மொழி மாற்றிகளும் நிரல்மொழிமாற்றிகளும் இருந்தாலும் இவை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுபவை அல்ல. பெரும்பாலான மொழி மாற்றிகள் நிரல்மொழிமாற்றிகளின் செயல்களையும் நிகழ்த்துகின்றன.

குறிப்புகள்

தொகு
  1. இவ்வகையில், மையச் செயற்பகுதி கூட இயந்திர கட்டளைகளுக்கான ஓர் மொழிமாற்றியே.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழிமாற்றி_(மென்பொருள்)&oldid=1638813" இலிருந்து மீள்விக்கப்பட்டது