மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா
மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா (Mohan Shumsher Jung Bahadur Rana) (நேபாளி: मोहन सम्शेर जंगबहादुर राणा) (23 டிசம்பர் 1885 – 6 சனவரி 1967) (பதவிக் காலம்: 30 ஏப்ரல் 1948 - 12 நவம்பர் 1951) நேபாள இராச்சியத்தின் 17வது பிரதம அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் 30 ஏப்ரல் 1948 முதல் 12 நவம்பர் 1951 முடிய பணியாற்றியவர்.[1] இவர் நேபாள இராச்சியத்தின் ராணா வம்சத்தின் இறுதி பரம்பரி பிரதம அமைச்சர் ஆவார்.
மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா | |
---|---|
श्री ३ मोहन शमशेर जंग बहादुर राणा | |
17வது நேபாள பிரதம அமைச்சர் [[லம்ஜுங் மற்றும் காஸ்கின் மகாராஜா]] | |
பதவியில் 30 ஏப்ரல் 1948 – 12 நவம்பர் 1951 | |
ஆட்சியாளர்கள் | திரிபுவன் ஞானேந்திரா |
முன்னையவர் | பத்ம சம்செர் பகதூர ராணா |
பின்னவர் | மாத்ரிக பிரசாத் கொய்ராலா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 23, 1885 |
இறப்பு | சனவரி 6, 1967 பெங்களூரு | (அகவை 81)
பெற்றோர் | சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா சந்திராலேகா பக்த லெட்சுமி தேவி |
வேலை | நேபாள பிரதம அமைச்சர் |
1950ல் நேபாள பிரதம அமைச்சர் மோகன் சம்செர் பகதூர் ராணாவின் சர்வாதிகார நிர்வாகத்திற்கு எதிராக, நேபாள மன்னர் திரிபுவன், பட்டத்து இளவரசன் மகேந்திரா மற்றும் மூத்த பேரன் பிரேந்திராவுடன் இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். அந்நேரத்தில் மகேந்திராவின் மூன்றறை வயது இளைய மகன் ஞானேந்திரா, நேபாள மன்னராக, மோகன் சம்செர் பகதூர் ராணாவால் முடிசூட்டப்பட்டார்.
இந்திய அரசு, நேபாள பிரதம அமைச்சர் சம்செர் பகதூர் ராணா, நேபாள காங்கிரஸ் மற்றும் நேபாள மன்னர் திரிபுவன் ஆகியோர்களுக்கு ஏற்பட்ட உடன்படிக்கையின் படி, 1951ல் மன்னர் திரிபுவன் நேபாளம் திரும்பி மன்னராக பதவியேற்றார்.
1951களின் முடிவில் நேபாளி காங்கிரஸ் கட்சியின் ஆதரவால், நேபாள இராச்சியத்தில் ராணா வம்சத்தின் பரம்பரை ஆட்சி ஒழிக்கப்பட்டதால் மோகன் சம்செர் பகதூர் ராண பிரதம அமைச்சர் பதவியிழந்ததால், நேபாளி காங்கிரஸ் கட்சியின் மாத்ரிக பிரசாத் கொய்ராலா, 16 நவம்பர் 1951ல் நேபாள பிரதம அமைச்சராக பதவியேற்றார்.
இறப்பு
தொகுபிரதமர் அமைச்சர் பதவி இழந்த மோகன் பகதூர் ராணா, நேபாளத்திலிருந்து வெளியேறி, இந்தியாவின் பெங்களூரில் தங்கியிருந்த போது, 1967ல் இறந்தார்.