மோகா மாவட்டம்

மோகா மாவட்டம் அல்லது மொகா மாவட்டம் (Moga district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் மொகா ஆகும். மொகா நகரம் ஒரு மாநகராட்சி ஆகும்.

பஞ்சாப் மாநிலத்தின் மாவட்டங்கள்

இம்மாவட்ட மக்களில் 40% - 45% விழுக்காட்டினர் அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா மற்றும் ஐக்கிய இராச்சியங்களில் பணி புரியும் வெளிநாடு வாழ் இந்தியர்களாக உள்ளனர். இம்மாவட்ட மக்கள் மால்வா பண்பாட்டைப் பின்பற்றுபவர்கள்.

பஞ்சாப்பில் அமைவிடம் தொகு

மொகா மாவட்டத்தின் வடக்கில் ஜலந்தர் மாவட்டம், கிழக்கில் லூதியானா மாவட்டம், தென்கிழக்கில் பர்னாலா மாவட்டம், தெற்கில் பதிண்டா மாவட்டம், தென்மேற்கில் பரித்கோட் மாவட்டம், வடமேற்கில் பெரோஸ்பூர் மாவட்டம் எல்லைகளாக உள்லது.

மாவட்ட நிர்வாகம் தொகு

மொகா மாவட்டம் மொகா, பாகபுராணா, நிகில் சிங் வாலா, தரம்கோட் என நான்கு வருவாய் வட்டங்களும்; மொகா, மொகா , பாகபுராணா, நிகில் சிங் வாலா, கோட்-சே கான் (இருப்பு) தரம்கோட் என ஆறு ஊராட்சி ஒன்றியங்களும்; 318 கிராமங்களும்; பாகபுராண மற்றும் தரம் கோட் என இரண்டு நகராட்சி மன்றங்களும்; பத்னி காலன், நிகில் சிங் வாலா மற்றும் கோட்-சே கான் என மூன்று நகரப் பஞ்சாயத்துகளும்; மொகா எனும் மாநகராட்சியும் கொண்டுள்ளது. [1]

அரசியல் தொகு

மொகா மாவட்டம் நிகில் சிங் வாலா (தனி), பாகபுராணா, மொகா மற்றும் தரம்கோட் என நான்கு சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 995,746 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 77.18% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 22.82% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 11.28%% விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 525,920 ஆண்களும் மற்றும் 469,826 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 893 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 2,242 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 444 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 70.68% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 74.44% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 66.48% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 107,336 ஆக உள்ளது.[2]

சமயம் தொகு

இம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 818,921 (82.24 %) ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 158,414 (15.91 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 9,388 (0.94 %) ஆகவும், கிறித்தவ, பௌத்த, சமண சமய மக்கள் தொகை மிகக் குறைவாக உள்ளது.

மொழிகள் தொகு

பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

புகழ் பெற்றவர்கள் தொகு

திரைப்படத்தில் தொகு

புற்றுநோய் அதிகமாக உள்ள மோகா மாவட்டம் தொடர்பான புற்று நோய் விழிப்புணர்வு குறித்து உத்தா பஞ்சாப் என்ற திரைப்படம் வெளிவர உள்ளது. [3]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகா_மாவட்டம்&oldid=3591335" இருந்து மீள்விக்கப்பட்டது