பட்டிண்டா மாவட்டம்

(பதிண்டா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பட்டிண்டா மாவட்டம் (Bathinda district) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது. [2] இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 3,344 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இம்மாவட்டத்தின் எல்லைகளாக, வடக்கே பரித்கோட் மாவட்டமும் மோகா மாவட்டமும், மேற்கே முக்த்சர் சாகிப் மாவட்டமும், கிழக்கே பர்னாலா மாவட்டமும் மான்சா மாவட்டமும், தெற்கே அரியானாவும் உள்ளன.

பட்டிண்டா
ਬਠਿੰਡਾ
மாவட்டம்
பஞ்சாபில் அமைவிடம்
இந்தியாவின் பஞ்சாபில் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
தலைமையிடம்பட்டிண்டா
பரப்பளவு
 • மொத்தம்3,344 km2 (1,291 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்13,88,525
 • அடர்த்தி420/km2 (1,100/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்143-001
தொலைபேசி குறியீடு91 164 XXX XXXX
இணையதளம்www.bathinda.nic.in
PB-03

மக்கட்தொகை தொகு

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணெக்கடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 13,88,859 ஆகும்[3]. இது சுவாசிலாந்து நாட்டின் மக்கட்தொகைக்குச் சமம் ஆகும்[4]. மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 414 பேர்கள் ஆகும்[3]. மக்கட்தொகை வளர்ச்சி (2001-2011) 17.37% ஆகும்[3]. ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 865 பெண்கள் ஆகும்[3]. இம்மாவட்டத்தின் கல்வியறிவு 69.6% ஆகும்[3].

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டிண்டா_மாவட்டம்&oldid=3561573" இருந்து மீள்விக்கப்பட்டது