மோசம் சா
மோசாம் சா, வாலாசன் சாசதா (Moazzam Jah, Walashan Shahzada) நவாப் மிர் சர் சுசாத் அலி கான் சித்திக் பகதூர், (21 டிசம்பர் 1907 - 15 செப்டம்பர் 1987), ஐதராபாத் இராச்சியத்தின் கடைசி நிசாம் ஓசுமான் அலி கான், மற்றும் அவரது முதல் மனைவி துல்கன் பாசா பேகம் ஆகியோரின் மகன் ஆவார். .
சுசாத் அலி கான் சித்திக் பகதூர் | |||||
---|---|---|---|---|---|
இளவரசர் மோசாம் சாவின் உருவப் புகைப்படம், 19 நவம்பர் 1931 (தேசிய உருவப்பட தொகுப்பு, இலண்டன்) | |||||
பிறப்பு | ஈடன் கார்டன், ஐதராபாத்து | 21 திசம்பர் 1907||||
இறப்பு | 15 செப்டம்பர் 1987 பெர்ன் வில்லா, ரெட் ஹில்ஸ், ஐதராபாத்து | (அகவை 79)||||
துணைவர் | நிலோபர் பரகத் பேகம் (தி. 1931; விவாகரத்து 1952) இரசியா பேகம் சாகிபா சாகிப்சாதி அன்வாரி சாகிபா | ||||
குழந்தைகளின் பெயர்கள் | சாமத் சா பாத்திமா பௌசியா பேகம் ஆமினா மர்சியா பேகம் பேகம் சாகிபா அலியா குல்சும் சகினா பேகம் | ||||
| |||||
மரபு | ஆசப் சா குடும்பம் | ||||
தந்தை | ஓசுமான் அலி கான் | ||||
தாய் | துல்கன் பாசா பேகம் |
இவர் முதலில் உதுமானியப் பேரரசின் கடைசி இளவரசிகளில் ஒருவரான நிலோபர் பரகத் பேகம் (4 ஜனவரி 1916 - 12 ஜூன் 1989) என்பவரை மணந்தார். பின்னர் இவர் அன்வாரி பேகம் சாகிபா மற்றும் இரசியா பேகம் சாகிபா என்ற இரண்டு மனைவிகளையும் மணந்தார். 1947 ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மூலம் இவருக்கு தனிப்பட்ட உயர்நிலைத் தகுதி வழங்கப்பட்டது.
மோசம் சா ஒரு கவிதை ஆர்வலராக இருந்தார். கவிஞர் நசிம் அபாண்டி ஆக்ராவிலிருந்து ஐதராபாத்து மாநிலத்திற்கு குடிபெயர்ந்த பிறகு அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். இளவரசர் ஷாஜி என்ற புனைப்பெயரில் கவிதையும் எழுதினார்.[1]
இளவரசார் ஐதராபாத்தில் உள்ள மலைக்கோட்டை அரண்மனையில் தங்கியிருந்தார். ஐதராபாத்தில் உள்ள பிரபலமான ஒரு சந்தை இவரது பெயரால் மோசாம் சா சந்தை என அழைக்கப்படுகிறது.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமோசாம் சா 2 சனவரி 1908 இல் மிர் சுசாத் அலி கான் என்ற பெயரில் பிறந்தார். இவரது தந்தை மிர் ஓசுமான் அலி கான், பிரித்தானிய இந்தியாவின் ஐதராபாத் மாநிலத்தின் கடைசி நிசாம் ஆவார். இவரது தாயார் துல்கன் பாசா பேகம் ஓசுமான் அலி கானின் முதல் மனைவி. இவருக்கு ஆசம் சா என்ற ஒரு மூத்த சகோதரரும் இருந்தார்.[2][3]
இவரது இளமை பருவத்தில், இவர் 'இளைய இளவரசர்' என்று பிரபலமாக அறியப்பட்டார். இவர் தனது தந்தை நிசாமிடமிருந்து ஆண்டு மானியமும் பெற்றார்.[4]
கவிஞர்
தொகுமோசாம் சா "ஷாஜி" என்ற புனைப்பெயரில் உருது கவிதைகள் மற்றும் கசல்களை இயற்றினார். ஹில் போர்ட் அரண்மனையில் இவர் தனது சொந்த கவிதை மன்றத்தை அமைத்தார். அதில் இலக்னோ மற்றும் தில்லியைச் சேர்ந்த சுமார் 30 உருது கவிஞர்கள் இருந்தனர். புலவர்கள் மாலையில் இவருடைய அரசவைக்கு வருவது வழக்கம். நள்ளிரவு வரையிலும் விருந்து நடந்தது. இளவரசர் அரசவையில் தானே இயற்றிய கவிதைகளை வாசிப்பார். இவருக்குப் பிறகு, மற்ற கவிஞர்கள் தங்கள் சொந்தக் கவிதைகளை வாசிப்பர். வைகறை தொழுகையின் பாங்கு (தொழுகைக்கான இசுலாமிய அழைப்பு) வரை இது தொடர்ந்தது.[4]
சொந்த வாழ்க்கை
தொகுநவம்பர் 12, 1931 இல், மோசம் சா பிரான்சின் நீஸ் நகரில் உதுமானியப் பேரரசின் 15 வயது இளவரசியான நிலோபர் பரகத் பேகம் என்பவரை மணந்தார். அதே நாளில், இவரது மூத்த சகோதரர் ஆசம் சா நிலோபரின் உறவினர் துரு சேவர் என்பவரை மணந்தார். நிலோபருக்கு குழந்தைப் பேறு இல்லாததால் இவர்களது திருமண வாழ்க்கை தடைபட்டது. 1952 இல், திருமணமான 21 ஆண்டுகளுக்குப் பிறகு, இவர்கள் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்தனர்.
1948 இல், இளவரசி நிலோபர் பரகத் பேகத்திடமிருந்து பிரிந்த பிறகு, சா இரண்டாவது முறையாக இரசியா பேகம் என்பவரை மணந்தார். மோசாம் சாவிற்கு ஒரு மகனும் ஆறு மகள்களும் இருந்தனர்.[5] இளவரசர் மோசம் சாவுக்கு இமாயத் அலி மிர்சா என்ற ஒரு பேரன் இருந்தார். அவர் 1990 களில் நிசாமின் நகைகளை இந்திய அரசிடம் ஒப்படைப்பதில் ஈடுபட்டார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Seshan, K. S. S. (2017-12-25). "Prince Moazzam Jah and his nocturnal court" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/society/history-and-culture/prince-moazzam-jah-and-his-nocturnal-court/article22274568.ece.
- ↑ Zubaida Yazdani (1985). The Seventh Nizam: The Fallen Empire. Cambridge University Press. p. 306. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780951081907.
- ↑ Elizabeth Hamilton (2016). The Feringhees: Sir Robert and Sir William—Two Europeans in India Volume 1: The Proud Empire; Volume 2: The Straight Race. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199093618.
- ↑ 4.0 4.1 KSS Seshan (25 December 2017). "Prince Moazzam Jah and his nocturnal court". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
- ↑ "Love, loss and longing: The journey of a Princess". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 January 2016. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
- ↑ "Keep jewels in Hyderabad, Nizam's kin Himayat Ali Mirza writes to PM Modi | Hyderabad News - Times of India". The Times of India. Jun 13, 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.